என்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக நிர்வாணமாக சென்றேன்

எனது தாய் ஒரு வைத்தியர், தந்தை ஒரு வியாபாரி, இன்று காலை அதிகாலை 4 மணியளவில் நுகேகொடை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்
வீதியில் அனைவரும் உடைகளை அணிந்து செல்வதை கண்டேன்.
ஆனால் ஏனையவர்களின் கவர்ச்சியை பெறுவதற்காக நிர்வாணமாக செல்ல தீர்மானித்தேன்.
அதனால் படிப்படியாக ஒவ்வொரு உடையையும் கழைந்தவாறு சைக்கிளில் பயணித்தேன் என அவர் பொலீசாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தார்
இவர் நிர்வாணமாக வீதியில் செல்வதை அவதானித்த ஒரு வைத்தியர் 119 மூலமாக அறிவித்ததை அடுத்து அவர் மாவனல்லை பிரதேசத்தில் பொலீசாரால் தடுத்து நிறுத்த முயற்சித்த போதிலும் இவரை தடுக்க முடியவில்லை.
அதன்பின் பொலீசார் கடுகண்ணாவை பொலீசாருக்கு அறிவுறுத்தியதை அடுத்து வீதிக்கு குறுக்கே பஸ் வண்டி ஒன்றை தடையாக நிறுத்தி தப்பித்து செல்ல முயன்ற இவரை தடுத்து நிறுத்தி உள்ளனர்
அதன் பின் கடுகண்ணாவை பொலீசார் இவருக்கு உடைகளை அணிவித்து மோட்டார் சைக்கிளுடன் இவரையும் உடன் கைது செய்துள்ளனர்.
இவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாக பொலீசார் தெரிவித்தனர்.