லெபனானில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா இலக்குகள் அழிப்பு – IDF தெரிவிப்பு!
லெபனானில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா இலக்குகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானில் தனது புதுப்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடங்கியதிலிருந்து, 200-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா ராக்கெட் ஏவுதளங்களை அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மார்ச் 2-ஆம் திகதி முதல், ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழுவிற்குச் சொந்தமான சுமார் 1,300 ஏவு குழாய்களை அழித்துள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளன.
இதேவேளை மேற்படி தாக்குதல்களில் 1,880 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 6,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





