ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கோர விபத்து – கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் பலி

பிரித்தானியாவின் கம்பிரியா நகரில், எம்6 என்ற மோட்டார் வழி சாலையில், கார் ஒன்று தவறான திசையில் சென்று கார், மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

ஸ்கோடா மற்றும் டொயட்டோ ரக கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி கம்பிரியா பொலிஸார் கூறும்போது, விபத்தில், கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்த ஸ்கோடா ரக காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுதவிர, 42 வயது ஆண், 33 வயது பெண், 7 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். டொயட்டோ காரில் வந்த இவர்கள் 4 பேரும் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர்கள். எனினும், இவர்கள் அனைருவம் ஒரே குடும்ப உறுப்பினர்களா? என்பது அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்தனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய மற்றொரு சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!