உலகம்

உடன் அமலுக்கு வரும் வகையில் 10 சதவீதம் வரி விதிப்பு – நீதிமன்றத்தை புறக்கணித்த ட்ரம்ப்!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கைக்கு எதிராக அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், உலக நாடுகள் மீது உடன் அமுலுக்கு வரும் வகையில் மீளவும் 10 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதாவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து அவர் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார். அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்திவருகிறார். இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி […]

Donald Trump உலகம் செய்தி

டொனால்ட் ட்ரம்ப்பின் உலகளாவிய இறக்குமதி வரிகள் இரத்து!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று (20) இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசை -மார்ச் 12 இற்கு பிறகு என்ன நடக்கும் ?

  • February 20, 2026
  • 0 Comments

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆனாலும்  இன்றும் நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவியது. லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். மேலும் மக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது. எவ்வாறாயினும் தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய […]

இலங்கை

08 தங்கப்பதக்கங்கள் – யாழில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த பெண்!

  • February 20, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில்  அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். நேற்று  நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் குறித்த பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.   ​ அவர் பெற்றுக்கொண்ட விருதுகள் வருமாறு, ​01. மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் […]

உலகம் செய்தி

டொனெட்ஸ்க் பகுதியை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க மாட்டோம் -செலென்ஸ்கி எச்சரிக்கை

  • February 20, 2026
  • 0 Comments

இந்த வாரம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, உக்ரைன் அதிரடி பதிலைத் தெரிவித்துள்ளது. உக்ரைன்  ஜனாதிபதி வோலோடிமிர் சேலென்ஸ்கி  , அமெரிக்காவின் அழுத்தம் மிகவும் ஒருதலைப்பட்சமானது என்று கூறினார். ரஷ்யா கட்டுப்படுத்தாத கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஐந்தில் ஒரு பங்கை உக்ரைனியர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது ரஷ்யா உக்ரைனின் சுமார் 19% நிலத்தை கட்டுப்படுத்துகிறது, இது மார்ச் 2022 இல் 26% இருந்ததைவிட குறைந்துள்ளது.

உலகம் செய்தி

சோமாலியாவில் பசி கொடுமை -உலக உணவுத் திட்டத்தின் உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்படுமா?

  • February 20, 2026
  • 0 Comments

சோமாலியாவில் நிதி பற்றாக்குறையால் உலக உணவுத் திட்டம் (WFP) வழங்கும் அவசர உணவு உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மிக கடுமையான பசி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.  மனிதாபிமான நிதியில் கடுமையான குறைவு உள்ளது என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, சுமார் 4.4 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் […]

உலகம்

ட்ரம்பின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

  • February 20, 2026
  • 0 Comments

உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்துள்ள வரிகளை அமெரிக்க உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது. அவசரகால அதிகாரச் சட்டத்தின் கீழ் பல நாடுகள் மீது குறிப்பாக தன்னுடைய கட்டளைக்கு அடிப்பணியாத நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதிப்பை அமுல்படுத்தியிருந்தார். இந்நிலையில், 1977 அவசரகால அதிகாரச் சட்டம் வரிகளுக்கான அதிகாரத்தை வழங்கவில்லை என்று வழக்குறைஞர்கள் வாதிட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையை செல்லுபடியற்றதாக்கியுள்ளது. இருப்பினும் அதிக வரம்புகளுடன், மாற்று சட்ட கட்டமைப்பின் கீழ் இறக்குமதி வரிகளை விதிக்கும் […]

உலகம்

வேலைவாய்ப்பு மோசடி – 1000 கென்யர்களை ஏமாற்றிய ரஷ்யா!

  • February 20, 2026
  • 0 Comments

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக பொய்க்கூறி சுமார் 1000 கென்யர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடுவதற்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரழந்துள்ளதாக கென்ய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையை கிமானி இச்சுங்வா (Kimani Ichung’wah) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ரஷ்ய தூதரக அதிகாரிகள் வேலைவாய்ப்பு முகவர்களுடன் இணைந்து இந்த மோசடியை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்க விமான சக்தி பெருக்கம்: 120 க்கும் மேற்பட்ட விமானங்கள் பிராந்தியத்தில் நிலைநிறுத்தம்

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மத்திய கிழக்கில் பரந்த அளவிலான இராணுவ சொத்துக்களை குவிப்பதை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான ஒப்பந்தம் குறித்து அதிகபட்சம் 10 முதல் 15 நாட்கள் என கூறினார். அரபிக் கடலில், USS ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானத்தாங்கி கப்பல் மற்றும் E-3 சென்ட்ரி AWACS விமானம் போன்ற முக்கிய படை பெருக்கிகள் செயற்பாடுகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. ஈரான், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய கடிதத்தில், எந்தவொரு […]

இந்தியா செய்தி

திமுக அணியில் தேமுதிக கேட்கும் தொகுதிகளால் நெருக்கடி

  • February 20, 2026
  • 0 Comments

திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தேமுதிகவும் ஒரு தொகுதி மதுரையில் கேட்பதால், ஏற்கெனவே திட்டமிட்டு தொகுதிகளைக் கேட்டு காய் நகர்த்தி வந்த ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, கடந்த முறை மதுரை கிழக்கு, மத்திய, வடக்கு, சோழவந்தான் மற்றும் தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், தெற்கில் மதிமுகவின் பூமிநாதன் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுக தனிப்பெரும் கட்சியாக மாவட்டத்தில் 5 […]

error: Content is protected !!