அமெரிக்காவில் தேசிய நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – 16 பேர் பலி!
அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர். இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. பலர் காயமடைந்துள்ள நிலையில், […]













