இலங்கை

மசாஜ் நிலையம் என இயங்கிய விபச்சார விடுதி! – 12 யுவதிகள் கைது

கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல காவல்துறையினர் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும், விடுதிகளின் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் […]

இந்தியா

300 அடி ஆழ்துளை குழிக்குள் விழுந்த இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்துள்ளது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். . பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். […]

பொழுதுபோக்கு

மலேசியாவில் சுற்றிவளைக்கப்பட்ட விஜய் சேதுபதி!! நடந்தது என்ன?

  • June 8, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவர். பல தமிழ் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது ‘மும்பைகார்’, ‘மெர்ரி கிறிஸ்மஸ்’, ‘ஜவான்’ ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டில் திரையுலகில் கலக்கி வருகிறார். நடிகர் ஆறுமுககுமார் இயக்கிய தனது 51வது படத்தின் வெளியீட்டு விழாவிற்காக மலேசியா சென்றிருந்தபோது சமீபத்தில் அங்கு பொது வெளியில் காணப்பட்டார்.   இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது, மேலும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படக்குழுவினர் […]

ஐரோப்பா

பெலாரஸ் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் பிரித்தானியா!

  • June 8, 2023
  • 0 Comments

பெலராஸ் மீதான புதிய பொருளாதாரத் தடைகளைக பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எளிதாக்குவதில் பெலாரஸ் பங்களிப்பு வகித்தமைக்காக இங்கிலாந்து மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இறக்குமதி தடைகள், இணையப் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கில் புதிய தடைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெலாரஸிலிருந்து தங்கம், சிமென்ட், மரம் மற்றும் ரப்பர் இறக்குமதியைத் தடை செய்வதும், பிரிட்டனில் இருந்து பெலாரஸுக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் இயந்திரங்கள், இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் […]

இந்தியா

ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்த சமந்தா

தமிழி, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து ‘குஷி’ […]

உலகம்

பாராளுமன்றத்தில் அழுத குழந்தை: அங்கேயே பாலூட்டிய எம்பி

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி […]

இலங்கை

ஊழல் எதிர்ப்பு சட்டமூல விவாதத்திற்கு நாள் குறிப்பு!

  • June 8, 2023
  • 0 Comments

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தை ஜூன் மாதம் 21-ஆம் திகதி நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இன்று (08) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இந்தியா

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்திய மாணவர்கள்! எஸ் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், போலியான பல்கலைக்கழக நுழைவு கடிதங்கள் மூலம் கனடாவிற்குள் நுழைந்திருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்பதால், அவர்களை வெளியேற்றும் முயற்சியில் கனடாவின் எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடா எல்லை சேவை நிறுவனம் சமீபத்தில் 700 இந்திய மாணவர்களுக்கு நாடு கடத்தல் தொடர்பான கடிதங்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் சேர்க்கை தொடர்பான நுழைவு கடிதங்கள் போலியானவை என கண்டறிந்ததை அடுத்து […]

error: Content is protected !!