மட்டக்களப்பில் உணவு உண்ட பெண் மரணம் – 3 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர் மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான உஷேந்தினி (வயது 27) என்பவரே இல்வாறு உயிரிழந்துள்ளார். குறித்து பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று மதிய உணவை உண்ட பின்னர் பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்த பெண், அவரது 4 மற்றும் 7 வயது இரு […]













