தங்க நகையை கொள்ளையிட்ட பொலிஸ் சார்ஜன்ட் கைது
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதான முகாமைத்துவ அதிகாரி அணிந்திருந்த ஐயாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (11) காலை பேருந்தில் பணிக்கு வந்த பிரதம முகாமைத்துவ அதிகாரி, பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் சென்ற போது, அருகில் இருந்த ஒருவர் திடீரென தாக்கி, கழுத்தில் இருந்த […]













