புட்டின் அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம் – அமெரிக்கா பரபரப்பு எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கவை விடுத்தள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டாகியும் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பிடமிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அச்சுறுத்தல் அறிக்கையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. […]













