பிரான்ஸில் கரை ஒதுங்கிய 23 டொல்பின்கள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்
பிரான்ஸில் 23 டொல்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸின் தென்மேற்கு பிராந்தியமான Landes நகர கடற்கரையில் இவை கரை ஒதுங்கியுள்ளது. கடந்த வார இறுதியில் இச்சடலங்கள் சுற்றுலாப்பயணி சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டொல்பின்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீன் பிடி வலையில் சிக்கி அவை இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதேவேளை, இப்பகுதியில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 395 கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













