ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் சோமாலியாவுக்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சோமாலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமைதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ஆதரவை முன்னேற்றுவதற்காக இந்த விஜயம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளராக அவர் செயற்படும் நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் சோமாலியாவுக்குத் இந்த விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அமைதி, பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமதுவைச் சந்தித்ததாகவும் குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை சமாளிப்பதற்கும், அனைவருக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கும் அரசாங்கத்தின் […]













