இந்தியா செய்தி

போலி மருந்துகளை உற்பத்தி செய்த தயாரிப்பு நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து!

  • April 19, 2023
  • 0 Comments

தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில், கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் போலி மற்றும் கலப்பட மருந்துகள் தயாரித்தது தெரியவந்ததையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 26 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

  • April 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்று 1,573 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 […]

இந்தியா செய்தி

பொதுமக்களுக்கு தன் கையால் உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர்

  • April 19, 2023
  • 0 Comments

அருள்மிகு குமாரகோட்டம் முருகன் கோவிலில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்பு பொதுமக்களுக்கு தன் கையால்  உணவு பரிமாறி மக்களுடன் உண்ட மாவட்ட ஆட்சியர காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

இந்தியா செய்தி

மந்திரவாதி சொன்ன வார்த்தை.. 10 வயது சிறுவன் நரபலி – பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி காரணம்!

  • April 19, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பர்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண வர்மாவின் 10 வயது மகன் விவேக். இவர் கடந்த 23ம் திகதி காணாமல் போனார்.மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப் போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது வயல்வெளி ஒன்றில் சிறுவன் விவேக் சடலமாக […]

இந்தியா செய்தி

சீன எல்லை அருகே 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

  • April 19, 2023
  • 0 Comments

சீன எல்லை அருகே 875 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மேலும் 37 வீதிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஊடீசு எனப்படும் இந்திய- சீன எல்லைச் வீதிகள் அமைக்கும் பணிகள் லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த 3ஆம் கட்டப் பணிகளுக்கான உயர்மட்டக் கூட்டத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீதிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

சிஎஸ்கே vs குஜராத் டைட்டன்ஸ் போட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்! வாய் மேல் கைவைக்கும் ரசிகர்கள்

  • April 19, 2023
  • 0 Comments

PL 2023 GT VS CSK: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2023) மார்ச் 31 வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் நான்கு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனியும் தலைமை வகிக்கின்றனர்.  […]

இந்தியா செய்தி

லடாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம்… கட்டிடங்கள் குலுங்கியதால் பதறிய மக்கள்!

  • April 19, 2023
  • 0 Comments

இன்று காலை 10.30 மணிக்கு லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். லடாக்கின் லே பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் லே, லடாக்கிலிருந்து 166 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை 10.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, […]

இந்தியா செய்தி

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : கலந்தாய்வு கூட்டம் முன்னெடுப்பு!

  • April 19, 2023
  • 0 Comments

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவி வருவதால் இது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்துள்ளார். மாநில பொது சுகாதாரத்துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்பட்ட பிறகு கொரோனா வைரஸ் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை சேர்ந்த கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன் […]

இந்தியா செய்தி

தமிழ்நாடு சார்பாக கோவையைச் சேர்ந்த 9 வீரர்

  • April 19, 2023
  • 0 Comments

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி ஆறு தங்கம்,12 வெள்ளி பதக்கங்கள் வென்று,ஒட்டு மொத்த அளவில் இரண்டாம் இடம் பிடித்தது.கோப்பையுடன் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கடந்த 20 ந்தேதி முதல் 24 ந்தேதி வரை தேசிய அளவிலான ஆறாவது வூசி சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப்பில் நடைபெற்றது.  இதில் இந்தியாவின் 32  மாநிலங்களைச் சேர்ந்த வூசு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு […]

இந்தியா செய்தி

இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வாலிபர் – இணையத்தில் வைரலாகும் காட்சிகள்

  • April 19, 2023
  • 0 Comments

திருச்சி மார்ச 27 இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும் வாலிபர் – இணையத்தில் வைரலாகும் காட்சிகளதிருச்சியில் உள்ள காவிரி பாலம் மற்றும் பைபாஸ் சாலையில் வாலிபர்  தனது இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்வது போன்ற காட்சி தற்போது இணையதளத்தில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. இது இருவரா அல்லது ஒரே நபரா என தெரியவில்லை இது போன்ற செய்கைகள உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் வாலிபர்கள் செயல்பட்டு வருகின்றனர். இளம் பிராயத்தில் பயம் அறியாத […]

error: Content is protected !!