2 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லக்னோவில் இன்று நடைபெற்ற 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் இறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கைல் மேயர்ஸ் 29 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 2 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்ட்யா 18 ரன்னில் ஆட்டமிழந்தார். […]













