மலேசியாவில் மீன் சாப்பிட்ட பெண் மரணம் – கோமா நிலையில் கணவர்
மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள உடலை பலமடங்கு பெரிதாக்கிக் கொள்ளும் பஃபர் மீன் அதிக விஷத்தன்மை உடையது. இதனை பெரும்பாலும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இந்நிலையில், வழக்கமாக மீன் வாங்கும் கடையில் இந்த மீனை வாங்கி சமைத்து மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]













