ஐரோப்பா

பர்கரில் எலிக்கழிவு ; 5 கோடி அபராதம் வழங்கும் மெக்டொனால்ட்ஸ்!

  • May 5, 2023
  • 0 Comments

வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பர்கர் உணவில் எலிக்கழிவு இருந்ததால் பெண்ணொருவருக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரூ.4.8 கோடி அபராதம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை பரப்பி பர்கர், ப்ரைஸ் போன்ற துரித உணவுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ரெஸ்டாரென்ட் கிளை ஒன்று பிரிட்டன் நாட்டின் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டன்ஸ்டோன் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு பெண் […]

உலகம் மத்திய கிழக்கு

ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் சவுதி அரேபியா!

  • May 5, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு  ஆசிய நாடுகளுக்கு கடந்த நான்கு மாதங்களில் முதல் முறையாக எண்ணெய் விலையை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ வெளியிட்டுள்ள தகவலின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி வரும் ஜுன் மாதம்,  அரபு லைட் கிரேடு எண்ணெய் ஏற்றுமதி விலை மே மாதத்துடன் ஒப்பிடும்போது பீப்பாய்க்கு 25 செண்ட் என்ற […]

இந்தியா

நில தகராரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் !

  • May 5, 2023
  • 0 Comments

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒ‍ரே குடும்பத்‍தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணித் தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கு இடையிலான காணித் தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே […]

ஐரோப்பா

சிறையில் இருந்த கொடூர குற்றவாளியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர் கைது!

  • May 5, 2023
  • 0 Comments

இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் […]

இந்தியா

சூடானில் இருந்து முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்பு!

  • May 5, 2023
  • 0 Comments

சூடான் நாட்டில் கடந்த மாதம் 15 ஆம் திகதி  முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சூடானில் போர் முனையில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டினரை மீட்கும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்த பணியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 16 விமானங்கள் மற்றும் 5 போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மீட்கப்படும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியா […]

ஐரோப்பா

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 5, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உக்ரைன் முதன்முறையாக  சுட்டு வீழ்த்தியதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை கிய்வ் மீது ஏவப்பட்ட Kh-47 Kinzhal ஏவுகணையிலிருந்து சிதைந்த புகைப்படங்கள் கிடைத்ததாகக் உக்ரைனிய செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. Kinzhal ஏவுகணை 3,000km (1,900 மைல்கள்) வேகத்தில் மணிக்கு 2.5 கிலோ மீற்றர் பயணிக்கும் என ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது என்பதுடன்,  குண்டுவீச்சுகள் அல்லது இடைமறிப்புகளால் ஏவப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையில் எலி காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

  • May 5, 2023
  • 0 Comments

தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா எஸ்.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர் ‘மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் இதுவரையில் 30 ஆயிரத்திற்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே […]

இலங்கை செய்தி வணிகம்

சொகுசு கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது

  • May 5, 2023
  • 0 Comments

அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் ஐளெபைnயை என்ற கப்பல் இந்தியா – கொச்சியில் இருந்து வந்தது. இந்த கப்பல் நாளை (06) இரவு மியான்மர் நோக்கி புறப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சிக்னியா கப்பலில் இருந்து வந்த சுற்றுலா குழுவினர் கொழும்பு நகருக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இலங்கை செய்தி

பௌத்த விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்பு

  • May 5, 2023
  • 0 Comments

வத்தேகம அல்கடுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த விகாரைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர சிகிச்சை பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வத்தேகம பொலிஸார் சிசுவை கண்டுபிடித்துள்ளனர். பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழந்தையின் தாய் மற்றும் தந்தையை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கை உலகம் செய்தி

இன்று இரவு முழு சந்திர கிரகணம்

  • May 5, 2023
  • 0 Comments

இன்று (05) இரவு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி அமைந்திருக்கும் போது பூரண சந்திர கிரகணம் ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு சந்திரன் பூமிக்குள் (அரை இருண்ட நிழல்) நுழையும் போது தொடங்கும். நாளை (06) அதிகாலை 1.01 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. இன்று இரவு 10.52 மணிக்கு கிரகணத்தின் […]

error: Content is protected !!