யாழ்ப்பாணத்தில் சூரிய சக்தியால் இயங்கும் இயந்திர படகு வெள்ளோட்டம்
சூரிய மின்னாற்றலில் (சோலார்) இயங்கும் இயந்திரபடகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் சக்தியை கொண்டு, மின்சாரத்தை பெற்றுக்கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகு வல்வெட்டித்துறையில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடல் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருட்களின் தேவை இல்லாமல் வெறுமனே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு இயங்க வைக்கின்ற […]













