ஐரோப்பா

ஜெனீவாவில் பழிக்கு பழிவாங்க காத்திருக்கும் பெற்றோர் – வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

  • June 7, 2023
  • 0 Comments

ஜெனீவாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, அவரது குடும்பத்தினர் காத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அச்சம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள Thônex என்னுமிடத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, அந்தப் பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குள் அடைந்துகிடக்கிறார்களாம்.இதற்கிடையில், கடந்த சில நாட்களில் அந்த பகுதிக்கு பல முறை பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளது அந்த […]

இந்தியா

600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்!

தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்/ அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே அவர்களில் பலர் அன்றாடக் […]

இந்தியா

கிளர்ச்சியாளர்களால் ஆம்புலன்சில் வைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தாய் மற்றும் மகன்!

  • June 7, 2023
  • 0 Comments

இந்திய மாநிலம் மணிப்பூர் நடக்கும் வன்முறையில் தாய், மகன் உட்பட மூவர் ஆம்புலன்சில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி எனும் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரியபோது, சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன் எதிரொலியாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருபிரிவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாகவும், 310 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள […]

ஐரோப்பா

ககோவ்கா அணை உடைப்பால் ஆபத்தில் உள்ள 42 ஆயிரம் பேர் : இரவுக்குள் உச்சத்தை எட்டும் வெள்ளம்!

  • June 7, 2023
  • 0 Comments

டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ககோவ்கா அணை இடிந்து விழுந்ததில் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் இருப்பதாகவும், இன்று இரவுக்குள் வெள்ளம் உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அத்துமீறலின் விளைவாக தெற்கு உக்ரைனில் உள்ள மக்களுக்கு “கடுமையான மற்றும் தொலைநோக்கு விளைவுகள்” ஏற்படும் என்று ஐ.நா உதவித் தலைவர் எச்சரித்துள்ள நிலையில், இந்த மதிப்பீடு வந்துள்ளது. அதேநேரம் இது மக்கள் தங்கள் வீடு, உணவு, பாதுகாப்பான நீர் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியேற்படும் […]

ஐரோப்பா வட அமெரிக்கா

பதவியேற்றபின் முதன்முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் ரிஷி சுனக்

  • June 7, 2023
  • 0 Comments

பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ரிஷி சுனக், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2 நாட்கள் பயணமாக வாஷிங்டன் சென்றுள்ள ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்க உள்ளார். மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு சென்றடைந்த ரிஷி சுனக்கை, அமெரிக்க அதிகாரிகளும் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதரும் வரவேற்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபருடன் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இடிந்து விழுந்த கவோவ்கா அணை : எழுவரை காணவில்லை என அறிவிப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

கவோவ்கா அணை இடிந்து விழுந்துள்ள நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஏழுப் பேர் காணாமல் போயுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. டினிப்ரோ ஆற்றி மீது கட்டப்பட்டிருந்த கவோவ்கா அணை இடிந்து விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரபரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஏழு பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து நேற்றைய தினம் 900இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த […]

உலகம் ஐரோப்பா

பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி!

  • June 7, 2023
  • 0 Comments

பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக போப்பாண்டவர் ரோம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். கடந்த சில நாட்களாக லேப்ரோசெல் (அடிபவியிற்று குடலிறக்கம்) காரணமாக அவதிபட்டுள்ள வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை போப்பிரான்ஸிஸ் கடந்த மாத இறுதியில் சுவாவசத் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை!

  • June 7, 2023
  • 0 Comments

இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,  பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருவதால், 2030 ஆம் ஆண்டளவில் இந்தியா-இலங்கை கிரிட் இணைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை புரிந்து கொள்ள உலக வங்கி இலங்கை மின்சார […]

இலங்கை

COPF குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்!

  • June 7, 2023
  • 0 Comments

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக சமகி ஜன பலவேகயவின்  (SJB) பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் – மீள் விசாரணைக்கு திகதியிடப்பட்டது!

  • June 7, 2023
  • 0 Comments

காலிமுகத்திடல் போராட்டகாரா்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சந்தேகநபா்களாக பெயாிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் ஜொன்ஸ்டன் பொ்னாண்டோ,  சனத் நிஷாந்த,  மிலான் ஜயதிலக்க உள்ளிட்டவா்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிா்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீளவும் அழைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தின் சந்தேகநபா்கள் தொடா்பில் சட்டமா அதிபாின் ஆலோசனை பெறப்பட்டதாகவும்,  அந்த ஆலோசனையை […]

error: Content is protected !!