ஐரோப்பா

பாஸ்தா போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் இத்தாலியர்கள்!

  • June 12, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இத்தாலியர்கள் பாஸ்தா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒவ்வொரு இத்தாலிய டேபிளின் பிரதான உணவுப் பொருளின் விலை பணவீக்க விகிதத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ரோம் அரசாங்கம் கடந்த மாதம் நெருக்கடிக் கூட்டத்தை நடத்தி, விலையில் தலையிட வேண்டாம் என்று முடிவு செய்தது. இதனையடுத்து பாஸ்தாவிற்கான விலை அதிகரித்துள்ளது. இதனையடுத்து   ஜூன் 22 முதல் ஒரு வார தேசிய பாஸ்தா வேலைநிறுத்தத்திற்கு இத்தாலியர்கள் அழைப்பு […]

ஆசியா இந்தியா

இந்திய பத்திரிக்கையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ள சீனா

  • June 12, 2023
  • 0 Comments

கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. 2020ம் ஆண்டு இந்தியாவில் 14 சீன பத்திரிக்கையாளர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது […]

இலங்கை

பிரதமர் மோடியை சந்திக்கவுள்ள ஜீவன் தொண்டமான்

  • June 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. பாரத பிரதமருடனான சந்திப்பின்போது […]

இந்தியா

இந்தியாவின் புதிய பிரதமராக தமிழர்?

தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் தேர்வாக வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமித் ஷாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு டெல்லி சென்று விட்டார். முன்னதாக, டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமித் ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், தமிழகத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்களை சந்தித்தாா். அதன் தொடர்ச்சியாக, சென்னை […]

ஐரோப்பா

Stoke-on-Trent இல் இரு சிறுவர்கள் உயிரிழப்பு : பெண் ஒருவர் கைது!

  • June 12, 2023
  • 0 Comments

ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் உள்ள வீட்டில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 11 வயது சிறுவன், மற்றும் 7 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த குழந்தைகளுக்கு தெரிந்த 49 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆழந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி […]

வட அமெரிக்கா

கடையில் திருடியதாக கூறி 14 வயது சிறுவனை என்கவுண்டர் செய்த பொலிஸார்

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலிஸார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸார் சிறுவனை விரட்டியுள்ளனர். பொலிஸார் நிற்க சொல்லியும் நிற்காமல் ஓடிய சிறுவனை ஒருவழியாக ஜேம்ஸ் என்ற காவலர் மடக்கிப் பிடித்து தரையில் படுக்க வைத்து அழுத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன், காவலரிடம் கெஞ்சியுள்ளான். ஆனால், அடுத்து வந்த […]

ஐரோப்பா

ஸ்வீடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

  • June 12, 2023
  • 0 Comments

ஸ்வீடனின் தலைநகருக்கு தெற்கே உள்ள புறநகர் பகுதியான ஃபர்ஸ்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத வெளிநாட்டவர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்று சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் இருபது வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர்  குன்னர் ஸ்ட்ரோம்மர், மொத்தம் 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதை உள்நாட்டு பயங்கரவாதம் என்றும் விவரித்தார்.

ஐரோப்பா

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 90 புலம்பெயர்ந்தோர்!

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து 37 குழந்தைகள் உள்பட 90 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல் துருக்கியில் இருந்து இத்தாலிக்கு செல்ல இருந்ததாக நம்பப்படுகிறது. ஏதென்ஸுக்கு தென்மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள கிரேக்க தீவான கைதிராவில் இருந்து பேரிடர் அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கப்பலில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 ஆண்கள், […]

இலங்கை

காலியில் துப்பாக்கிச் சூடு! சந்தேக நபர் தப்பியோட்டம்

பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை, பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

அமரகீர்த்தி அத்துகோரல கொலை – 42 பேருக்கு எதிராக வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது ,மே மாதம் 9ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!