சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், சிங்கப்பூர் தேர்தல் துறை, ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் தேர்தல் துறை பொதுமக்கள் நேற்று முதல் வரும் ஜூன் 28- ஆம் திகதி வரை தேர்தல் துறையின் இணையதளப் பக்கத்தில் அல்லது நேரில் சென்றுப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]













