இந்தியா

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இருவரும் விசரணைக்கு முன்னிலையாகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் முன்னிலையாக சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

அமைதியை வேண்டி நிறைய பிரார்த்தனைகள் செய்தேன்: சமந்தா உருக்கம்

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது.   யசோதா படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொண்ட சமந்தா ஒரு நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின்னர் அதிலிருந்து தான் மீண்டு வருவதாக தெரிவித்து, தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுப்பட்டார். […]

இலங்கை

G.C.E O/L பரீட்சைதான் மாணவரின் வெற்றியை தீர்மானிக்க வேண்டுமா ?

  • June 16, 2023
  • 0 Comments

ஒரு மாணவரின் வெற்றியை (G.C.E) சாதாரண பரீட்சைதான் தீர்மானிக்க வேண்டுமா என்பது குறித்து   அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அலரி மாளிகையில் இன்று (16)   இடம்பெற்ற ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த விடயம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் கூறினார். இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து 7,342 ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலைகளுக்கு 1,729 ஆசிரியர்களும், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 626 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த […]

இலங்கை

விவசாயிகளின் கையில் இனி துப்பாக்கி ? விவசாய அமைச்சர் பணிப்புரை

பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் சேதமடைவதைத் தடுக்க வெடிமருந்துகளுடன் கூடிய துப்பாக்கிகளை வழங்குமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், துப்பாக்கிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றினூடாக கோரிக்கை விடுக்குமாறு, விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். வன விலங்குகளால் பயிர்களுக்கு பாரிய சேதம் […]

இலங்கை

வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

  • June 16, 2023
  • 0 Comments

தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளின் கீழ் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய சியம்பலாபிட்டிய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சுமார் 75-80 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தையிலிருந்தும், மத்திய வங்கியிடமிருந்தும் எரிபொருள் கொள்வனவு செய்ததாலும், முதலீடு செய்யும் […]

இலங்கை

75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம்! விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக […]

ஐரோப்பா

ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திருடி வந்த கும்பல் கைது

  • June 16, 2023
  • 0 Comments

பிரான்சில், ஹோட்டல்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயைத் திருடும் கும்பல் ஒன்றை பொலிஸார் பிடித்துள்ளார்கள். அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய செய்தி உள்ளது. ஒரு காலத்தில் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய், பயன்படுத்தப்பட்டபின் உபயோகமற்ற பொருளாக எண்ணப்பட்டது. இப்போதோ, அதை திருடுவதற்கென பெரிய கொள்ளைக் கும்பல்களே உள்ளன.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரான்சின் Centre-Val-de-Loire பகுதியில் 52 எண்ணெய்த்திருட்டு சம்பவங்கள் நிகழ்துள்ளன. 385 டன் எண்ணெய் திருடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 460,000 யூரோக்களுக்கும் அதிகமாகும். பிரான்ஸ் பொலிஸார் இப்படி பயன்படுத்தப்பட்ட சமையல் […]

ஆசியா

ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை ஏவி சீனா புதிய சாதனை

  • June 16, 2023
  • 0 Comments

ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களை ஏவி சீனா புதிய சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி அந்நாடு புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப சரிபார்ப்பை வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் […]

ஆசியா

தென்கொரியாவில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான பேருந்துகள் – 80 பேர் காயம்!

  • June 16, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் இன்று (16.06) சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடந்ததாக கங்வான் மாநில தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்டனர். […]

ஆசியா

பாலியல் ஒப்புதல் வயதை 16ஆக உயர்த்தி உள்ள ஜப்பான்

  • June 16, 2023
  • 0 Comments

ஜப்பான் நாட்டின் பாலியல் குற்றச் சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி ஜப்பானில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த சட்டப்பூர்வ பாலியல் ஒப்புதல் வயது ஜப்பானில் தான் இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.இது தொடர்பான சட்ட மசோத ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தை ஜப்பானில் உள்ள மனித உரிமைகள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்றுள்ளன. […]

error: Content is protected !!