இலங்கை

வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு புயல் உருவாகுமா?

  • December 1, 2025
  • 0 Comments

தற்போதைய நிலையில் வங்காள விரிகுடாவில் டித்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இன்று நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டித்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு […]

இலங்கை செய்தி

நிவாரண உதவிக் கொள்கையில் சீர்திருத்தம் வேண்டும்: முன்னாள் தூதுவர்

  • December 1, 2025
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் தூதுவர் கனநாதன் (Kananathan) அவர்கள், அரசாங்கத்தின் வெளிநாட்டு நிவாரண நன்கொடைக் கொள்கையை (policy on overseas relief donations) அவசரமாகச் சீர்திருத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள விதிமுறைகள் பழமையானதும், மிகுந்தகட்டுப்பாடனதும் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்குத் தடையாக உள்ளன என்று அவர் விவரித்துள்ளார். கென்யாவில் உள்ள இலங்கை டயஸ்போரா (Kenyan Sri Lankan diaspora) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு 40 அடி கொள்கலன்களில் (40-foot containers) புதிய ஆடைகள், உலர் உணவுப் பொருட்கள் […]

இலங்கை

மன்னாரில் தரைவழிப்பாதை முழுமையாக துண்டிப்பு : தவிக்கும் மக்கள்

  • December 1, 2025
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் ஹெலிகொப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. குஞ்சுக்குளம் மற்றும் மாதா கிராம […]

ஆசியா ஆஸ்திரேலியா இந்தியா இலங்கை செய்தி

இலங்கைக்கு உதவிகளை வாரி வழங்கும் உலக நாடுகள்

  • December 1, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியா டித்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருமில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. சீனா இதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை சீனாவும் வழங்கியுள்ளது. இந்த நிதியை சீன செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு அவசர நிவாரண உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன […]

இலங்கை

மோசமாக பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

  • December 1, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். வைத்தியசாலை தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வைத்தியசாலைக்குள் ஐந்து அடிக்கும் மேல் நீர் நிறைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சைப்பிரிவு நோயாளிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏனைய நோயாளிகள் வெள்ள நீர் ஓரளவு குறைந்தத […]

இலங்கை

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படையினர் சடலமாக மீட்பு

  • December 1, 2025
  • 0 Comments

சுண்டிக்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்கள் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் நடந்தபோது அந்தப் பகுதியில் வெள்ள நிவாரணக் குழுவில் இருந்த கடற்படையினரே காணாமல் போயிருந்தனர். காணாமல் போன கடற்படையினரை தேடி சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்த நிலையில், மீட்புக் குழுக்களை அந்த இடத்திற்கு விரைந்து அனுப்பியது. சவாலான வானிலைக்கு மத்தியிலும் காணாமல் போன ஐவரது உடல்களை மட்டுமே மீட்புக்குழுவினரால் கைப்பற்ற முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

கிணற்று நீரை பயன்படுத்த வேண்டாம் : குடிநீர் குறித்து எச்சரிக்கை

  • December 1, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தினார். வயிற்றுப்போக்கு போன்ற நீரினால் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கொதித்து ஆறிய நீரை குடிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் தெரிவித்தார்.. பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்திக் கொள்ள பொதுமக்கள் விரைந்து […]

பொழுதுபோக்கு

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி!

  • December 1, 2025
  • 0 Comments

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது அதன் விமானியே உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (30) மாலை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று வென்னப்புவ லுணுவில […]

இலங்கை

இலங்கையில் இதுவரை 355 பேர் மரணம்

  • December 1, 2025
  • 0 Comments

நாட்டில் டிட்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று மாலை வரை 334 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்ட புதிய தகவல்களின் படி 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: கல்வி அமைச்சு அறிவிப்பு

  • November 30, 2025
  • 0 Comments

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ஒரு விசேட அறிக்கையில், இந்தத் தீர்மானம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தற்காலிக இடைநிறுத்தமானது விரிவுரைகள், பரீட்சைகள் மற்றும் பயிற்சித்திட்டங்கள் அனைத்து இதில் […]

error: Content is protected !!