இலங்கை செய்தி

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் பாதிப்பு!!

  • December 2, 2025
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 260 பேர் இன்று (02) வரைக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே. சுகுணதாஸ் தெரிவித்தார். கடந்த 25 ஆம் திகதி தொடக்கம் இன்று (02) காலை 7:00 மணி வரைக்கும் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 212 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலும் 6615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் 521 குடும்பம் தம்பலகாமம் […]

இலங்கை செய்தி

வெள்ளப் பேரழிவின் இறப்புகள் துல்லியமாக கணக்கிடப்படவில்லை – எதிர்கட்சி குற்றச்சாட்டு!

  • December 2, 2025
  • 0 Comments

சமீபத்திய வெள்ளப் பேரழிவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை, ஏனெனில் சில இறப்புகள் கணக்கிடப்படவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம்,   அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை துல்லியமான எண்ணிக்கையாக இருக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். துல்ஹிரியாவில் சுமார் 21 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குருநாகல் போன்ற பகுதிகளிலிருந்தும் இதே போன்ற தகவல்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, கொடுக்கப்பட்ட […]

ஐரோப்பா

பண்டிகைக் காலம் – பரபரப்பாகும் இங்கிலாந்து விமான நிலையங்கள்!

  • December 2, 2025
  • 0 Comments

இங்கிலாந்து விமான நிலையங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான கிறிஸ்துமஸ் காலத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 22 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டும் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இது ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டில் 90.2 மில்லியன் பயணிகள் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

பேரிடர் நிலை : 410 மரணங்கள் பதிவு, இலட்சக்கணக்கானோர் பரிதவிப்பு!

  • December 2, 2025
  • 0 Comments

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட  மரணங்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 336 பேர் காணாமல் போயுள்ளதுடன்,  407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல்  பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், […]

இலங்கை

மின்சாரம் மற்றம் எரிவாயு கசிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழல் குறித்த சிறப்பு அறிவுறுத்தல்களை காவல்துறை வழங்கியுள்ளது. இதற்கமைய வெள்ளத்திற்கு பிறகு தங்களது வீடுகளுக்கு திரும்பும் மக்கள் மின்சாரம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையின் வலியுறுத்தல்,  01. மின் மூலங்களை அணுகுவதற்கு முன் அதிகாரப்பூர்வ மின் தொழில்நுட்ப வல்லுநரின் பரிசோதனையைப் பெறுங்கள்.  02. ஈரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம்.  03. எரிவாயு கசிவு ஏற்பட்டால், மின்சாரம் அல்லது எரிவாயு மூலம் இயங்கும் எந்த உபகரணங்களையும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

உக்ரைனின் தற்காப்பு கோட்டையை கைப்பற்றிய ரஷ்யா : சீர்குலையும் அமைதி ஒப்பந்தம்!

  • December 2, 2025
  • 0 Comments

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் (Pokrovsk) மற்றும் வோவ்சான்ஸ்க் ( Vovchansk) ஆகிய நகரங்களை  கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய படைகள் நேற்று அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆதாரங்களை முன்வைக்காமல் மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போரில் ரஷ்யா முன்னேறி வருகிறது, சமரசம் செய்யத் தேவையில்லை என்ற செய்தியை அனுப்பும் வகையில் […]

இலங்கை

மற்றொரு சூறாவளி உருவாகிறதா? வானிலை ஆய்வுத் துறை விளக்கம்!

  • December 2, 2025
  • 0 Comments

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், இந்த மாதம் இலங்கையில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை அதிகாரியான  மெரில் மெண்டிஸ்  நேற்று தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து பருவமழை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு குறைந்த அழுத்த அமைப்பு அல்லது சூறாவளி புயல் உருவாகும் என்ற செய்திகளையும் […]

ஐரோப்பா

UKவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த அழைப்பு!

  • December 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட 800,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. சமூக நீதி மையத்தின் (CSJ) புதிய பகுப்பாய்வில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட 10 பெற்றோரில் நான்கு பேர் தங்கள் குழந்தை சமூக வலைத்தளத்தில் குறைந்தது ஒரு தளத்தையாவது பயன்படுவத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ் (Lord Nash)  இந்த எண்ணிக்கையை “ஆழ்ந்த கவலைக்குரியது” என்று விவரித்துள்ளார். அத்துடன் சமூக ஊடக […]

உலகம்

குளிர் பருவம் ஆரம்பம் – அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில், டிசம்பர் முழுவதும் “அதிக” குளிரான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாதத்தின் (டிசம்பர்) மூன்றாவது வாரத்தில் கனேடிய சமவெளிகளிலிருந்து அமெரிக்க கிழக்கு கடற்கரை வரை அதிக குளிர் நிறைந்த வானிலையை மக்கள் உணர்வார்கள் என காலநிலை ஆய்வாளர் ஜூடா கோஹன் (Judah Cohen) கணித்துள்ளார். அதேபோல் இந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மத்திய  மற்றும்  அட்லாண்டிக் பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு கீழான வெப்பநிலையே பதிவாகும் […]

இலங்கை செய்தி

நிவாரணக் குழுக்களால் ஏற்படும் இடையூறு -காவல்துறையின் விசேட கோரிக்கை!

  • December 2, 2025
  • 0 Comments

பேரிடர் பாதித்த பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் இருப்பது, சாலை மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் வுட்லர் (ASP) F. U. (Wootler)  இந்த நிவாரணக் குழுக்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இருப்பினும், தற்போது சாலை பழுதுபார்ப்பு நடைபெற்று வரும் மாவட்டங்களுக்குள் வாகனங்கள் அதிக அளவில் வருவது, மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இடையூறாக […]

error: Content is protected !!