பிரித்தானியாவின் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்!
பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், […]













