இலங்கை

பிரதமர் மோடிக்கு கடிதம் ;நாளை இந்திய தூதரிடம் கையளிப்பு

  • July 12, 2023
  • 0 Comments

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். […]

இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் தெரிவு! கூடியது பல்கலைக்கழகப் பேரவை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி..வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை இன்று கூடியது. இதன்போது, துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. […]

பொழுதுபோக்கு

பணத்தை தூக்கி முகத்தில் வீசிய பாக்கியா… கோபி-ராதிகாவை வெளியேற்றி அதிரடி

  • July 12, 2023
  • 0 Comments

விஜய் டிவியின் முதன்மை மற்றும் முன்னணி தொடராக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து இருந்து வருகிறது. Urban categoryயிலும் கடந்த சில வாரங்களாக இந்தத் தொடர் தொடர்ந்து சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்துவரும் இந்தத் தொடரின் இந்த வார ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து சேனலின் முதன்மை இடத்தில் நிலை கொண்டுள்ள இந்தத் தொடர், கடந்த சில வாரங்களாக Urban […]

இலங்கை

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை ;போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

  • July 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் நோக்கில், இன்று புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் நகர காவல் அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்; காவல் உயரதிகாரிகள் 3 பேர் பலி

  • July 12, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் மேற்கே ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள நகர காவல் மற்றும் வழக்கறிஞர்கள் அலுவலகம் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். நேற்றிரவு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கவர்னர் என்ரிக் அல்பேரா தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். இது ஒரு கோழைத்தனம் வாய்ந்த தாக்குதல் என குறிப்பிட்ட அவர், மெக்சிகன் மாகாணம் முழுமைக்கும் ஒரு […]

இலங்கை

காலி கடற்பகுதியில் இலங்கை மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

  • July 12, 2023
  • 0 Comments

இலங்கையின் காலி கடற்பகுதியில் இந்தோனேசிய மீன்பிடிக்கப்பல் மேற்கொண்டதாக சந்தேகப்படும் பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் இலங்கை மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பெயர் வெளியிடப்படாத இந்த மீனவர், ஐவர் கொண்ட தனது குழுவுடன், ஜூன் 22ஆம் திகதி பல நாள் மீன்பிடி இழுவை படகில் கடலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், அவர்கள் பயணித்த படகு வெளிநாட்டுக் கப்பலுடன் மோதியுள்ளது. இதனை தொடர்ந்து, வெளிநாட்டுக் கப்பலில் இருந்தவர்கள், இலங்கை இழுவை படகு மீது பெற்றோல் குண்டால் […]

வட அமெரிக்கா

காட்டுத் தீ காரணமாக கனடியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • July 12, 2023
  • 0 Comments

கனடாவில் காட்டுத் தீ காரணமாக கண் நோய்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வகையிலான கண் நோய்கள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டுத் தீ தாக்கம் ஏற்பட்டுள்ளது. புறச்சூழலில் நடமாடும் போது கண்களில் எரிச்சல் நிலை ஏற்பட்டால் அது குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக வளி மாசடைவதாகவும் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசடைதல் காரணமாக அதிக […]

இலங்கை

சாந்தனுக்கு அனுமதி வழங்குகள் – ஜனாதிபதியிடம் தாயார் விடுத்த கோரிக்கை

  • July 12, 2023
  • 0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தனை இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக ஜனாதிபதிக்கான கடிதத்தையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஊடாக வெளிவிவகார அமைச்சருக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]

ஆப்பிரிக்கா

மஸ்கை விட பணக்கார அரசன் பற்றி தெரியுமா?

  • July 12, 2023
  • 0 Comments

எலான் மஸ்க், மார்க்ஷுக்கர்பெர்க், பில்கேட்ஸ், ஜெஃப் பெசாஸைவிட உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வரலாற்றில் இருந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடியுமா? மாலி என்ற நாடு தற்போது வறுமை பட்டியலுக்குள் உள்வாங்கப்பட்ட நாடாக இருந்தாலும், உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்த  நாடாக வரலாற்றில் அறியப்படுகிறது. இங்குதான்  உலகின் மிகப் பெரிய பணக்காரரான மன்சா முசா என்ற அரசன் வாழ்ந்து வந்திருக்கிறான்.  இவருக்கு அரியாசனம் எளிதாக கிடைத்துவிடவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி அபூபக்கர் என்ற அரசன் விட்டுச் […]

இலங்கை

யாழில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் கடற்படை – மக்களை அணி திரளுமாறு அழைப்பு

  • July 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் நாளைய தினம் மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான […]

error: Content is protected !!