ஐரோப்பா

சுவிஸில் மனித உரிமைகள் மீறல்… ரஷ்ய அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி

  • July 13, 2023
  • 0 Comments

ரஷ்ய அமைப்பு ஒன்று, சுவிட்சர்லாந்தில் மனித உரிமைகள் மீறல் நடப்பதாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கும் ரஷ்ய அமைப்பான Russian Mission in Geneva என்னும் அமைப்பு, ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த ட்வீட்டில் சர்ச்சைக்குரிய மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1. சுவிட்சர்லாந்தில் ரஷ்யர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். 2. சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் அமைந்துள்ள சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. 3. சுவிட்சர்லாந்து, பேச்சுரிமையைக் கட்டுப்படுத்துகிறது. இந்த […]

இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒருபோதும் நஷ்டஈட்டை பெறப்போவதில்லை -மனுவல் உதயச்சந்திரா

  • July 13, 2023
  • 0 Comments

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.மன்னாரில் இன்று வியாழக்கிழமை(13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மன்னார் மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலக அதிகாரிகள்(OMP) மரணச் சான்றிதழ் மற்றும் […]

செய்தி

விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடி பிரபல நடிகையின் மகளா?? நடந்தா நல்லாத்தான் இருக்கும்….

  • July 13, 2023
  • 0 Comments

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார் தேவயானி. அவரது மகள் இனியா சமீபத்தில் தான் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரி சேர்ந்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் ராஜகுமாரன் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய இரண்டாம் மகள் இனியா விரைவில் சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் உடன் தான் இணைந்து நடிக்கவைக்க போவதாகவும் கூறி […]

இந்தியா

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் ரக வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜன்த் சிங், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒப்பந்தங்கள் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

சந்தானத்தின் வேடிக்கையான பேய்கள் நிறைந்த உலகத்திற்குள் நுழையுங்கள்…

  • July 13, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் பாடல்கள் […]

தென் அமெரிக்கா

பிரேசிலில் மதுபான விடுதி மீது மர்மகும்பல் துப்பாக்கி சூடு ;4 பேர் பலி

  • July 13, 2023
  • 0 Comments

பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ளது பார்க் பாரைசோ நகரம். அங்கு நட்சத்திர மதுபானவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அதிகமானோர் நள்ளிரவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மகும்பல் ஒன்று வந்தது. அக்கும்பல் திடீரென விடுதிக்குள் புகுந்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் உள்னே அமர்ந்திருந்தவர்கள் பயத்தில் அலறினர். தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்மகும்பல் தப்பியோடியது. இதுகுறிந்து அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த […]

இலங்கை

யாழில் அரசியல்வாதி வீட்டிலேயே தன் கைவரிசையை காட்டிய திருடர்

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை (12)மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது. வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன்போது திருடிச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பான cctv […]

வட அமெரிக்கா

கனடாவின் ஒன்றாறியோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

  • July 13, 2023
  • 0 Comments

கனடாவின் ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில் இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் காற்று கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த நகரின் வளியில் ரசாயன பதார்த்தங்கள் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.உண்மையில் இந்த காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரும் நாளொன்றுக்க ஒரு சிகரட்டை புகைப்பதற்கு நிகரான ஆபத்தினை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.டொரன்டோ பல்கலைக்கழக பேராசிரியர் மெத்தியூ அடம்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பொருட்கள் முழுமையாக எரியாத போது […]

ஆசியா

பாகிஸ்தானில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து பாரிய தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

  • July 13, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து நடந்தது. மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினருடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து […]

இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் பால்மாவின் விலை?

  • July 13, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான சுங்க வரி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பால்மாவிற்கு 100 ரூபாய் வரி அறவிடப்பட்டுள்ளது. இந்த வரித்திருத்தம் மறு அறிவித்தல் வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்குமா என்ற கேள்வி நுகர்வோருக்கு எழுந்துள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் வரி திருத்தம் செய்யப்பட்டாலும், பால்மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!