இந்தியா ஐரோப்பா

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கட்டும் ரஷ்யா!

  • December 5, 2025
  • 0 Comments

இந்தியாவில் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை  கட்டவுள்ளதாக புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருடாந்திர  உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் குறித்த விவாதங்களை முன்னெடுத்துள்ளார். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளுடன் ரஷ்யா ஒத்துழைத்து வருவதாக புடின் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு அமைதிக்கானது என்றும், உக்ரைனில் அமைதியான தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை கைவிடோம்: ஜனாதிபதி உறுதி

  • December 5, 2025
  • 0 Comments

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணி வாங்குவதற்கும், வீடு அமைப்பதற்கும் நிதி வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, தம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் […]

அரசியல் இலங்கை

அரசு பொறுப்புகூற வேண்டும்: சஜித் வலியுறுத்து

  • December 5, 2025
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பலி எண்ணிக்கை 600 ஐ தாண்டியது!

  • December 5, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 214 பேர் காணாமல்போயுள்ளனர். 4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 43 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த […]

இந்தியா

தடையின்றி எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா – இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்!

  • December 5, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கு தடையின்றி எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி  புட்டின் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மொஸ்கோவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா இந்தியாவிற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக 50 சதவீதம் வரி விதிப்பையும் மேற்கொண்டிருந்தது. இருப்பினும் இந்தியா ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

உலகம்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு ( Pete Hegseth) எதிராக 02 குற்றச்சாட்டுகள்!

  • December 5, 2025
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு ( Pete Hegseth) எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளதாக மிச்சிகன் (Michigan) ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர் ( Shri Thanedar),  தெரிவித்துள்ளார். கரீபியன் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுத்து வரும் படுகொலைகள் தொடர்பில் அவர் தனது முதலாவது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிக்னல்கேட் (Signalgate)’ ஊழல் தொடர்பாக ரகசியத் தகவல்களை பொறுப்பற்ற முறையில் கசியவிட்டமை அல்லது தவறாக கையாண்டமை தொடர்பில் தனது இரண்டாவது குற்றசாட்டை […]

உலகம்

30 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

  • December 5, 2025
  • 0 Comments

அமெரிக்கா தனது சர்ச்சைக்குரிய பயணத்தடையை விரிவுப்படுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய ஏறக்குறைய 30இற்கும் மேற்பட்ட  நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு   கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள நாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் பாதுகாப்பு காரணங்களை காட்டி 12 நாடுகளில் இருந்து வரும் புலம்பெயர்வோர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரபல விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு!

  • December 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையத்தின் சேவைகள் இன்று  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வழங்குநர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் சிக்கலை விரைவில் தீர்க்க விமான நிலையக் குழுக்கள் பணியாற்றிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஏராளமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது  விமான சேவைகள் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை செய்தி

கரையைக் கடந்த வெளிநாட்டு சொகுசுப் பொருட்கள் – நெடுந்தீவில் பரபரப்பு!

  • December 5, 2025
  • 0 Comments

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டு , அவற்றை சோதனையிட்டனர். சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன காணப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் , கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று – தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தல்!

  • December 5, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் குளிர்பருவம் ஆரம்பமாகியுள்ள நிலையில், பல நாடுகளில் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. இது சுகாதார அதிகாரிகளுக்கு பல சவால்களை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. A/H3N2 வைரஸ், குறிப்பாக துணைப்பிரிவு K உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எவ்வாறாயினும் புதிதாக பரவி வரும் வைரஸ் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். A/H3N2 என்ற பழைய திரிபுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் […]

error: Content is protected !!