ஐரோப்பா

ஐபோன் பயன்படுத்த தடை – புட்டின் விடுத்த அதிரடி உத்தரவு

  • July 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் உளவு பார்பததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி புட்டின், ரஷ்ய அரசாங்கத்தை ஐபோன்கள் பயன்படுத்த தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தார். அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் போது ஐபோன் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் இருந்து அலுவலக சம்மந்தப்பட்ட மின்னஞ்சலைத் […]

உலகம்

அமெரிக்கா – ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • July 18, 2023
  • 0 Comments

அமெரிக்கா – ஐரோப்பாசில பகுதிகளில் தகிக்கும் வெப்பம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியா முதல் டெக்சஸ் வரை நிலவிவரும் கடும் வெப்பம் இந்த வாரயிறுதியில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோரு நாளும் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பீனிக்ஸில் தொடர்ந்து 16ஆவது நாளாக வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கும் மேல் பதிவானது. இந்த நிலையில் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் வெப்பம் வாட்டுகிறது. இத்தாலியில் இந்த […]

இலங்கை

மொட்டு இருக்கும் வரை பாசிசத்திற்கு இடமில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

  • July 18, 2023
  • 0 Comments

ஜே.வி.பியின் போராட்டத்தின்புாது அதில் கலந்து கொண்ட அனைவரின் கணக்குகளிலும் பணம் வரவு வைக்கப்பட்ட விதம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். ஜே.வி.பியின்  மூளையாகச் செயற்படுபவர்களின் மரபணுக்களில் கோபம், வெறுப்பு, பொறாமை, தீவைப்பு, கொலை போன்ற கலாசாரம் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், போராட்டத்தில் இருந்து கோடீஸ்வரர்களாக மாறிய இவர்கள், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி தொகையில் மேலும் 100 யூரோ?

  • July 18, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி தொகை மீண்டும் 100 யூரோ அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பல நலன்களை பெற்று வருகின்றனர். ஜெர்மனியில் சமூக உதவி பணமானது தற்பொழுது பேர்க கலட் என்ற பெயருடன் தனி நபருக்கு 502 யூரோ வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளையில் பல சமூக நல அமைப்புக்கள் இந்த மாதாந்த கொடுப்பனவை 725 யூரோவாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளது. […]

இலங்கை

தபால் சேவையை டிஜிக்டல் மயமாக்க திட்டம்!

  • July 18, 2023
  • 0 Comments

தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக,  வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார  தெரிவித்துள்ளார். நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்கும் இறுதி இலக்குடன் தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடையும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தபால் சேவையை நவீனமயமாக்கும் பணியை அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர்,  தபால் துறையை எந்த வகையிலும் தனியார் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தீ விபத்து – இருவர் பலி – பலர் காயம்

  • July 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிபத்து சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் கடற்கரை நகரமான Lens (Pas-de-Calais) இல் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பரவிய தீயினை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். வீட்டுக்குள் ஒன்பது பேர் சிக்கியிருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். அதன்முடிவில் ஒரு ஆண் மற்றும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

  • July 18, 2023
  • 0 Comments

பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியதில் இருந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கட்டுமான வேலைகளில் பற்றாக்குறை நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு தீர்வுக்கான வெளிநாடுகளில் இருந்து வேலையாட்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாளிகள் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவ்வாறு செய்வது கடந்த பத்தாண்டுகளாக நிகர குடியேற்றத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து வரும் பிரதமர் ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அரசியல் தலைவலியை ஏற்படுத்தும் […]

ஐரோப்பா

இத்தாலிய விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம் – புதன்கிழமை வரை மூடல்

  • July 18, 2023
  • 0 Comments

இத்தாலியின் Catania நகரில் உள்ள விமான நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை தொடர்ந்து விமான நிலையம் புதன்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை நிர்வகிக்கும் நிறுவனம் Twitter தளத்தில் தகவல் வெளியிட்டது. நேற்றிரவு முன்தினம் நேர்ந்த தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்போது அங்கு நிலவும் கடுமையான வெப்பத்துக்கும் தீச்சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்பது சரியாகத் தெரியவில்லை. கடும் வெப்பத்தால் நேற்று […]

உலகம்

அமெரிக்கா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

  • July 18, 2023
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் 1600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நியூயார்க் நகருக்கு அருகிலுள்ள மூன்று பெரிய விமான நிலையங்கள் மிகவும்இ பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  நெவார்க் லிபர்ட்டி இன்டர்நேஷனல்இ ஜான் எஃப். கென்னடி இன்டர்நேஷனல் மற்றும் லாகார்டியா விமான நிலையங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில்இ பயணிகள் தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக […]

இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு வெளியான  தகவல்!

  • July 18, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கை குறித்து ஓரளவு பாதுகாப்பைப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமாக்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]

error: Content is protected !!