இலங்கை

மின்னுவாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

  • July 20, 2023
  • 0 Comments

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (20) அதிகாலை அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த […]

இந்தியா

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 100 பேர் மாயம்!

  • July 20, 2023
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில்,  நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் நிலச்சரிவில் […]

இந்தியா

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்கள் ;நெஞ்சை பதறவைக்கும் செய்தி

  • July 20, 2023
  • 0 Comments

மணிப்பூரில் குகி பழங்குடி இன பெண்ணை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரில் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டுமென மெய்தி இனத்தவர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், குகி இனத்தவர் இதை எதிர்க்கின்றனர்.இரு தரப்புக்கும் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று வரை நீடிக்கிறது, இதில் பல கொடுமையான சம்பவங்களை நடக்கிறது. இதுவரை […]

இலங்கை

எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் – காஞ்சன!

  • July 20, 2023
  • 0 Comments

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (20.7) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  இது தொடர்பில் இன்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டங்கள் மற்றும் விநியோகம் மீளாய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான […]

இந்தியா

மணிப்பூர் நிர்வாண வீடியோ விவகாரம்;டெல்லியில் மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  • July 20, 2023
  • 0 Comments

மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டா செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் இந்த பரபரப்பான சூழலில் நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் மாநிலங்களவை […]

இலங்கை

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு!

  • July 20, 2023
  • 0 Comments

கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை 04 வீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க வங்கிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. கிரெடிட் கார்டுகளுக்கு தற்போது 34 சதவீதம் வட்டி அறவிடப்படுகின்ற நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 30 வீதமாக அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதத்தை குறைத்துள்ளதுடன் வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

ஆசியா

பாகிஸ்தானில் அடுத்தடுத்து மோதிக் கொண்ட 6 பேருந்துகள் -35 பேர் காயம்!

  • July 20, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 6 பேருந்துகள் மோதி கொண்ட சம்பவத்தில் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமாபாத்-பெஷாவர் சாலையில் சென்று கொண்டிருந்த 6 பேருந்துகள் புர்ஹான் பகுதியில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இதனை அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை

ஜனாதிபதி ரணில் இந்தியா விஜயம்; 5 பதில் அமைச்சர்கள் நியமனம்

  • July 20, 2023
  • 0 Comments

இரண்டு நாட்களுக்கு மட்மே, ஐந்து பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வியாழக்கிழமை (20) மாலை செல்லவுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர் நாட்டுக்கு திரும்பும் வரையிலும் ஜனாதிபதியிடம் இருக்கும் அமைச்சுகளின் பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய […]

இலங்கை

முதுகெலும்பிருந்தால் கையொப்பம் இடுங்கள் – நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சஜித் கருத்து!

  • July 20, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்க எதிராக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20.07) கையெழுத்திட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல், இதன்காரணமாக கடந்தகாலங்களில் மக்கள் உயிரிழந்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளால் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், ரஞ்சித் மத்துமபண்டார, லக்ஸ்மன் […]

பொழுதுபோக்கு

சூர்யா பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கின்றது….

  • July 20, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிற ஜூலை 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 23-ந் தேதி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யே போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் […]

error: Content is protected !!