தமிழினத்தை சீண்ட வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!
சரத் வீரசேகர இனவாதம் கக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்ற (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்த பேசிய அவர், சரத் வீரசேகர அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார். அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார். […]













