ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து
ஜப்பானில் ரயிலில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒசாகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 37 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 3 கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் ஜப்பான் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குற்றச் சம்பவங்கள் குறைவாகப் பதிவாகும் நாடாக ஜப்பான் […]













