உலகம் முக்கிய செய்திகள்

உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறிய வெப்பக்காற்று!

  • July 25, 2023
  • 0 Comments

ஐரோப்பா உட்பட உலகின் பல நாடுகளில் அச்சுறுத்தும் வெப்பக்காற்று பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கின் அறிக்கை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் அதீத வெப்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கு மேல் கூடியது. கரியமில வாயுக்களின் வெளியேற்றம் குறைக்கப்படாவிட்டால், அது 2080களில் நான்கு மடங்காகும் என்று எச்சரிக்கப்பட்டது. சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக அறிக்கை குறிப்பிட்டது. மிதமிஞ்சிய வெப்பம், ஏழை மக்களை அதிகம் வாட்டுவதாகக் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • July 25, 2023
  • 0 Comments

1966 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டொலர்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக நாணயங்கள் மற்றும் தாள்களின் பயன்பாடு குறைந்த முதல் ஆண்டாக கடந்த ஆண்டு (2022) மாறியுள்ளது. ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிக்கைகளின்படி, 2021 ஐ விட 2022 இல், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டொலர்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா பணத்தாள்கள் அல்லது நாணயங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு டிஜிட்டல் நாணயப் பாவனைக்கு மாறுவதற்கு இது ஒரு நல்ல போக்கு என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டில் […]

பொழுதுபோக்கு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’… புதிய அப்டேட்….

  • July 25, 2023
  • 0 Comments

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘போலா சங்கர்’. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை வைத்து தமிழில் உருவாகி வரவேற்பை இந்த படம் தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPTயின் Android பதிப்பு அடுத்த வாரம் வெளியீடு!

  • July 25, 2023
  • 0 Comments

OpenAI நிறுவனம் ChatGPT-ன் Android பாதிப்பை விரைவில் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. ChatGPT அதன் அறிமுகத்திற்குப் பிறகு அதிவிரைவாக 100 மில்லியன் பயனர்களை எட்டிய சேட் பாட் என்ற சாதனையை செய்தது. அதன்படி பேஸ்புக், ஸ்னாப் சாட் மற்றும் மைஸ்பேஸை இது முந்தியது. கடந்த சில மாதங்களாகவே GPT-3.5 மற்றும் GPT-4 போன்ற பெரிய மொழி மாடல்களில் இயங்கும் தொழில்நுட்பமாக ChatGPT இருந்துவருகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நபர்கள் இதைத் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். மனிதர்களைப் […]

இலங்கை

புதிய திட்டம் விரைவில் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

  • July 25, 2023
  • 0 Comments

புதிய ‘Visit Sri Lanka’ என்ற மூலோபாய சுற்றுலாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார மேம்பாட்டிற்காக அதிக செயலூக்கம் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்களாக 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதை நோக்காக கொண்டதாக அரசாங்கத்தின் இந்த திட்டம் அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் சில மாதங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே […]

ஐரோப்பா

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

  • July 25, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடும் வெயில் மற்றும் மழையின்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் மிகமோசமாக Isère பிராந்தியத்தின் வடபகுதி நகரங்கள் பத்திற்கும் மேல் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் பல பகுதிகள் மூன்று நாட்களிற்கு முன்னர் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அடுத்த மூன்று நாட்களிற்குள் மழை பெய்யாவிட்டால், இந்தப் பகுதிக்கான குடிநீர் முற்றாகத் தீர்ந்து விடும் ஆபத்து உள்ளதெனவும் Amballon பகுதிக்கான நீர்க் குழாய்களில் குடிநீர் முற்றாகத் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுவோருக்கு வெளியான தகவல்

  • July 25, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்று வருவோரின் நிதி நிலை தொடர்பாக மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் போர்கன் கிள்ட் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்களுக்கு சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஒபேட்டஸ் ஹைட் அவர்கள் உத்தேசித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் வேலை இல்லாது இருப்பதாக ஆராயப்பட்டுள்ளது. அதனால் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்வாறு வேலை இல்லாது இருக்கும் போது தற்பொழுது ஜொப் சென்டர் […]

ஐரோப்பா

உலகளவில் பலர் மரணிக்கும் அபாயம் – ஐநா விடுத்த முக்கிய எச்சரிக்கை

  • July 25, 2023
  • 0 Comments

உலகில் உணவு விலையேற்றத்தால் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதென ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கருங்கடல் வழியே தானியங்களைக் கொண்டுசெல்ல உதவும் உடன்பாட்டிலிருந்து ரஷ்யா அண்மையில் பின்வாங்கியது அதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. ரஷ்யா திங்கட்கிழமைமுதல் உக்ரேனின் தானியக் கிடங்குகளை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது. அது அனைத்துலக மனிதநேயச் சட்டத்தை மீறும் செயல் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கண்டித்தது. உலகெங்கும் தானியங்களைக் கொண்டுசெல்லும் கருங்கடல் துறைமுக உடன்பாடு கடந்த ஆண்டு கையெழுத்தானது. உக்ரேனுக்கும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – அரிசி வாங்கி குவிக்கும் மக்கள்

  • July 25, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இந்திய அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததை அடுத்து சிங்கப்பூரில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் இந்திய அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில கடைகளில் அரிசி இருப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல சில கடைகளில் விலை உயர்வும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்தபா சென்டரில் நபருக்கு இரு அரிசி பாக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாக வாசகர் ஒருவர் கூறினார். இந்தியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக […]

இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் முடிவை மாற்றிக் கொண்ட பிரபலம்

  • July 25, 2023
  • 0 Comments

Lஇலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அலகப்பெரும ஆகிய மூவருக்கும் இடைலேயே போட்டி இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி காட்டும் தயக்கம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், […]

error: Content is protected !!