இலங்கை

முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

  • July 25, 2023
  • 0 Comments

முட்டை ஒன்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை  நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (25.07) நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது. இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மிகக் குறைந்த விலையில், விற்பனை செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதற்கமைய நாடெங்கிலும் உள்ள சதொச நிறுவனங்களின்  மூலம் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

‘மார்க் ஆண்டனி’ குறித்து புதிய செய்தியை வெளியிட்டார் விஷால்.. என்ன தெரியுமா?

  • July 25, 2023
  • 0 Comments

நடிகர் விஷால் தற்போது தனது அடுத்த படமான ‘மார்க் ஆண்டனி’ ரிலீசுக்கு தயாராகி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஒரு அறிவியல் புனைகதை மற்றும் இது காலப் பயணம் பற்றியது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் விஷால், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய சினிமா அனுபவமாக இருக்கும் என்று கூறினார். திரைப்படத்தைப் பற்றி […]

ஆசியா

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கம்?

  • July 25, 2023
  • 0 Comments

சீனவெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து குயின்ஹேங் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 25 ஆம் திகதி இலங்கை, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அவர் பொதுவெளியில் காணப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    

இலங்கை

இலங்கையில் ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ஜனாதிபதிக்கு சி.வி.ஆலோசனை

  • July 25, 2023
  • 0 Comments

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது இதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார். மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் […]

விளையாட்டு

கால்பந்து சம்மேளனத்திற்கான தேர்தல்! அவசரமாக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு!

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான (FFSL) தேர்தலை நடத்துவதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

கங்கை ஆற்றில் சிக்கிய டொல்பின்… சமைத்து உண்டவரை கைது செய்த பொலிஸார்!

  • July 25, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நசீர்பூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் குமார், சஞ்சய், தீவன், பாபா ஆகியோர் கடந்த 22ம் திகதி கிராமத்திற்கு அருகே உள்ள கங்கை ஆற்றில் மீன்பிடிக்க சென்றனர். ஆற்றில் வலையை வீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் அவர்கள் வீசிய வலையில் டொல்பின் சிக்கியுள்ளது. இதையடுத்து, டொல்பினை பிடித்த 4 பேரும் அதை தங்கள் தோளில் சுமந்து கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் வீட்டில் வைத்து டால்பினை வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஆற்றில் பிடித்த டொல்பினை […]

ஆசியா

சீனாவின் கிரேட் புத்தர் ஆலயத்தில் தீ விபத்து ;115 அடி புத்தர் சிலை சேதம்

  • July 25, 2023
  • 0 Comments

சீனாவின் கன்சு மாகாணம் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பௌத்த ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி புத்தர் சிலை சேதம் அடைந்தது. கி.பி 425ம் ஆண்டு காலத்தை சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இந்த புத்தர் சிலை செய்யப்பட்டதாகவும், சிலையின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்ததாகவும் எஞ்சிய பகுதி அப்பிடியே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கட்டமைப்புகள் தீயில் அழிந்து விட்டதாகவும் ஆனால் ஆலயத்தின் கலாச்சார நினைவிச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் […]

பொழுதுபோக்கு

ஒரேநாளில் 2 ஜெயிலர் படம்…. இறுதி நேரத்தில் இப்படியா நடக்கனும்?

  • July 25, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் படம் சிலைக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வருகிற ஜூலை 28-ந் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. அதனால் இப்படத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி […]

மத்திய கிழக்கு

திருமணம் நிச்சயமான மகிழ்ச்சியில் மலை உச்சிக்கு சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!

  • July 25, 2023
  • 0 Comments

துருக்கி நாட்டின் வடமேற்கே போலண்ட் கேப் பகுதியில் வசித்து வருபவர் நிஜாமதீன் குர்சு. இவர் எசிம் டெமிர் (39) என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து, சமீபத்தில் இந்த இளம் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை கொண்டாடுவது என முடிவு செய்து அவர்கள் இருவரும் மலை பகுதிக்கு காரில் சென்றனர். பின்பு மலை உச்சிக்கு ஏறி சென்ற அவர்கள் உணவு மற்றும் மதுபானம் குடித்து கொண்டாடியுள்ளனர். இதன்பின்பு, சுற்றுலா செல்லலாம் என முடிவு […]

இலங்கை

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு -இளம் பெண் எரித்துக் கொலை! பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்

வவுனியா தோணிக்கல் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 23.07.2023 அன்று அதிகாலை அடையாந்தெரியாத நபர்கள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இதன்போது வீட்டிற்கும் தீ வைத்தததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் பத்து பேர் தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தனர் இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்பி ருவான் குணசேகர, குறித்த வீட்டில் வசித்து வந்த 19வயது சிறுமியின் பிறந்தநாள் வைபவம் 22ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது . இதன் போது வீட்டிற்கு வருகை தந்த சிலரால் […]

error: Content is protected !!