இலங்கை

அரசாங்கம் கல்விமுறையில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்! சிவஞானம் ஸ்ரீதரன்

அரசாங்கம் தற்போதைய கல்விமுறையிலே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாணவர்களின் கல்வியிலே ஐந்தாம் தர புலமைப் பரிசில், பதினோராம் தரம் ஆகியவை பொருத்தமற்ற கல்வி முறை எனவும் இன்னமும் சரியான கல்விக் கொள்கைக்குள் அரசாங்கம் வரவில்லை என்றும் இதனை திருத்தி அமைப்பதன் […]

இலங்கை

கொழும்பு சிறுநீரக வைத்தியசாலையில், சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம்!

  • July 26, 2023
  • 0 Comments

கொழும்பு மாளிகாவத்தை தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து கையிருப்பு சரியான முறையில் பராமரிக்கப்படாமையால் அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் தயாராக உள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “தேசிய சிறுநீரக மருத்துவமனை […]

இலங்கை

மட்டக்களப்பிற்கு பைக்கில் கஞ்சாவை கடத்திய இருவர் கைது!

  • July 26, 2023
  • 0 Comments

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு மோட்டார்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாறு பகுதியில் வைத்து கைது 9 கிலோ 540 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார். மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன வின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே […]

பொழுதுபோக்கு

இணையத்தை அதகளம் செய்கின்றது ஜெயிலர் படத்தின் 3வது ‘ஜுஜுபி’ பாடல்

  • July 26, 2023
  • 0 Comments

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடல் சற்று முன் வெளியானது. ஏற்கனவே காவாலா பாடல் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்த நிலையில், இரண்டாவது சிங்கிளான ஹுகும் பாடல் வரிகள் சர்ச்சைகளையும் ரசிகர்கள் சண்டையையும் கிளப்பியது. இந்நிலையில், மீண்டும் சூப்பர் சுப்பு வரிகளில் உருவாகி உள்ள 3வது சிங்கிளான ‘ஜுஜுபி’ பாடலும் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் […]

ஐரோப்பா

பயணிகளுக்கு உணவுக்குப் பதிலாக KFC கொடுத்த பிரிட்டிஷ் எயார்வேஸ்..!

  • July 26, 2023
  • 0 Comments

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானச் சேவையில் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உணவுக்குப் பதிலாக KFC சிக்கன் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23 ஜூலை) பிரிட்டனின் Turks and Caicos தீவிலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகளுக்கு KFC கோழி வழங்கப்பட்டுள்ளது.எனினும் விநியோகிக்கப்பட்ட KFC சிக்கன் முறையாகக் குளிரூட்டப்படவில்லை என்று ஊடகங்கள் தெரிவித்தன. சுமார் 12 மணிநேரப் பயணத்தில் பயணிகளுக்கு உணவளிக்கவேண்டும் என்பதால் விமானச் சிப்பந்திகள் மாற்று வழிகளை யோசித்தனர். விமானம் சிறிது நேரம் பஹாமாஸில் (Bahamas) […]

இலங்கை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம்! வீட்டில் பொலிசார் விசேட சோதனை நடவடிக்கை

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக் அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த […]

பொழுதுபோக்கு

படங்கள் தொடர் தோல்வி.. தற்கொலைக்கு முயன்ற ராசியில்லாத நடிகை?

  • July 26, 2023
  • 0 Comments

நடிகை பூஜா ஹெக்டேவின் படங்கள் தோல்வி அடைந்து வருவதால், ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த நிலையில், […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஜுனியர் வைத்தியர்கள் விடுத்துள்ள அறிவிப்பு!

  • July 26, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள ஜூனியர் வைத்தியர்கள் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை நான்கு நாட்கள் வெளிநடப்பு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இது குறித்த அறிவிப்பை இன்று (26.07) பிரித்தானிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஊதிய பிரச்சினையை வலியுறுத்தி பிரித்தானிய வைத்தியர்கள் ஐந்தாவது முறையாகவும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு வைத்தியர்கள் பெற்ற ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை பெற வைத்தியர்கள் போராடி வருகின்றனர். இது தற்போதைய நிலையில், 35 வீதம் அதிகமாகும். இருப்பினும் பிரித்தானிய பிரதமர் […]

இலங்கை

வவுனியா வர்த்தக சங்க கட்டிடம்; அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு

  • July 26, 2023
  • 0 Comments

முறையான அனுமதி பெறப்படாது அரச காணியில் அமைக்கப்பட்ட வவுனியா வர்த்தக சங்க கட்டிடம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வவுனியா நகரின் அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் […]

இலங்கை

கல்வியங்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி! மாத சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு சம்பள பணம் கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) எனும் சிறுமி , வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் […]

error: Content is protected !!