ஆசியா

வரலாறு காண வீழ்ச்சியில் சீன நுகர்வோர் சந்தை..ஆனால் ஆணுறை விற்பனை உயர்வு!

  • July 27, 2023
  • 0 Comments

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில் முன்னணி வகிக்கும் யுனிலீவர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சீனாவின் சொத்து வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவால், அந்நாட்டின் நுகர்வோர் வர்த்தக அடையாள அளவீடு வரலாறு காணாத வகையில் மிக குறைவாக காணப்படுகிறது என தெரிவித்து உள்ளது. எனினும், சீனாவின் […]

உலகம்

கம்போடியா பிரதமர் பதவியில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்?

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான கம்போடிய மக்கள் கட்சியும் தேர்தலில் பங்கேற்றது.அதற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைந்தன. 125 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கம்போடிய மக்கள் கட்சி 120 இடங்களைக் கைப்பற்றியது. இதன்படி மொத்த வாக்குகளில் 96 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. இதன் பின்னர், ஆசிய நாடுகளில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த ஹுன் சென் (வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பிரதமர் […]

இலங்கை உலகம்

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

  • July 27, 2023
  • 0 Comments

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கோதுமை ஏற்மதி தடைப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச ரீதியில் கோதுமை மாவிற்கான பற்றாக்குறை எழுந்துள்ளது. இதன்நிமித்தம் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையிலும் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உலகம்

தடை செய்யப்பட்ட ஏவுகணைகள்! ரஷ்யாவிடம் வெளிப்படுத்திய வடகொரியா

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், கண்காட்சி ஒன்றில் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரிடம் பெருமையுடன் காட்டியுள்ளார். அண்டை நாடுகளான வடகொரியாவும் ரஷ்யாவும் வியாழக்கிழமை உறவை வலுப்படுத்த உறுதி தெரிவித்ததாகவும் வடகொரிய அரசாங்க ஊடகம் தெரிவித்தது. வடகொரியாவில் ‘வெற்றி நாளாக’ கொண்டாடப்படும் கொரியப் போரின் 70வது ஆண்டு நிறைவையொட்டி ரஷ்ய அமைச்சர் செர்கெய் ஷோய்குவும் சீனாவின் உச்ச ஆட்சி மன்ற உறுப்பினரும் இவ்வாரம் வடகொரியாவுக்கு வந்திருந்தனர். அப்போதுதான் தடை செய்யப்பட்ட ஏவுகணைகளை   கிம் ஜோங் […]

இந்தியா

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ளும் மோடி அரசு!

  • July 27, 2023
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரமும் இந்த விடயத்தில் மோடி மௌனம் காப்பதாக கூறி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தார். மோடி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் கடந்த மே மாதம் […]

இலங்கை

கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒரு வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல […]

பொழுதுபோக்கு

4 டிகிரி குளிர்ந்த நீரில் 6 நிமிடம் சமந்தா செய்யும் வேலையை பாருங்கள்….

  • July 27, 2023
  • 0 Comments

சமந்தா நடிப்பில் கடைசியாக ‘சகுந்தலம் படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. தொடர்ந்து தற்போது குஷி படத்தில் நடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தவிர பாலிவுட்டில் சிடாடல் எனும் தொடரிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சமந்தா நடிப்பதற்கு இடைவேளை விட்டுவிட்டு தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய்காக சிகிச்சை எடுக்க உள்ளாராம். ஆனால்  அதற்கு முன்னர் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள சாம் அங்கு தனது தோழியான மேக்கப் கலைஞர் […]

இலங்கை

இலங்கையில் அதிக முதலீடுகளை செய்யுமாறு இந்திய நாடாளுமன்றம் பரிந்துரை!

  • July 27, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. நெருக்கடியான காலங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை வழங்குவதில் இலங்கை சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து இந்திய மக்களவையின் வெளியுறவுக் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில்,  2021 ஆம் ஆண்டில், இந்த நாட்டில் மிகப்பெரிய […]

இந்தியா

‘அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள்’: பாஜக-ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் BJP-RSS மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆளும் கட்சி தங்கள் அதிகார வேட்கையில் எந்த மாநிலத்தையும் எரிக்க அனுமதிக்கும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்திய இளைஞர் காங்கிரஸின் தொண்டர்களுக்கு அவர் ஆற்றிய மெய்நிகர் உரையில், பாஜக-ஆர்எஸ்எஸ் அதிகாரத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன, மக்களின் வலியைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறினார். “அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்கள், […]

இலங்கை

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணத்தில் முறைக்கேடு!

  • July 27, 2023
  • 0 Comments

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு வழங்கிய பணம் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று (27.07) காலை கிரிகெட் நிறுவனத்தை ஆர்ப்பாட்டகாரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாகவும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளுக்கு கிரிக்கெட் அமைப்பு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு பணத்தை வழங்குவது யாருடைய தனிப்பட்ட பாவனைக்காக அல்ல […]

error: Content is protected !!