பொழுதுபோக்கு

தோனி அகலக்கால் வைத்தாரா? LGM படத்தின் விமர்சனம்….

  • July 28, 2023
  • 0 Comments

எம் எஸ் தோனி சொந்தமாக தோனி என்டர்டைன்மென்ட் என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதில் தன்னுடைய முதல் படமாக ஹரிஷ் கல்யாணை வைத்து எல்ஜிஎம் படத்தை தயாரித்து இருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும் நதியா ஆகியோர் நடிப்பில் எல்ஜிஎம் படம் உருவாகி இருக்கிறது. லெட்ஸ் கெட் மேரீட் என்பதை சுருக்கமாக எல்ஜிஎம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் கண்டிஷன் பெயரில் 2 […]

மத்திய கிழக்கு

நைஜரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்: கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா

  • July 28, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் திடீரென அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியது. இதனால் அதிபர் முகமது பாசுமை ராணுவம் சிறை வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் நைஜர் ராணுவ வீரர்கள் குழு அங்குள்ள அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினர். அப்போது, கைது செய்யப்பட்ட அதிபர் முகமது பாசும் தனது பதவியில் இருந்து அகற்றப்பட்டு உள்ளார். எனவே அங்கு ராணுவ ஆட்சி கொண்டு […]

இலங்கை

லயத்து கோழிக்களுக்கு பாதுகாப்பு படையினர் தடை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மறைப்பாடு

  • July 28, 2023
  • 0 Comments

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் தமிழ் நாடகம் நடத்தப்படுவதை தடுக்க தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 09ம் திகதி மாலை, பொகவந்தலாவ, கொட்டியாகல தோட்டத்தில் அரங்கேற்றப்படவிருந்த லயத்து கோழிகள் நாடகத்தை தடுக்க இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இணைந்து செயற்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜூலை 26ம் திகதி முறைப்பாடு செய்த, நாடகத்தின் நெறியாளர், எதிர்காலத்தில் […]

பொழுதுபோக்கு

‘இந்தியன் – 2’இல் அவ்வை சண்முகியாக மாறிய கமல்… வெளிவரும் ரகசியங்கள்…

  • July 28, 2023
  • 0 Comments

ஷங்கர் – கமலஹாசன் கூட்டணியில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகி இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. புதுபுது தொழில்நுட்பங்களை தனது படங்களில் பயன்படுத்துவது இயக்குனர் ஷங்கரின் வழக்கம். […]

இலங்கை

வடக்கு – கிழக்கில் பூரண ஹர்த்தால் – மன்னாரிலும் ஆதரவு

  • July 28, 2023
  • 0 Comments

மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) மன்னார் மக்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கியிருந்தனர். அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த அனைத்து தனியார் சேவைகளும் […]

இலங்கை

ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகரம்!

  • July 28, 2023
  • 0 Comments

வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி  யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் எடை அதிகரித்ததால் கவிழ்ந்த படகு – 26 பேர் பலி

  • July 28, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பயணிகள் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர். இதனால், ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு […]

இலங்கை

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை வைத்தியரின் மனிதாபிமான செயல்

  • July 28, 2023
  • 0 Comments

இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை(28) மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகள் வழங்கி வைத்துள்ளனர். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளனர். நேற்று (27) வியாழக்கிழமை […]

இலங்கை

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்கில் இருந்து பில்லியன் கணக்கில் பணப்பறிமாற்றம்!

  • July 28, 2023
  • 0 Comments

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதகரின் 11 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பாதிரியாருக்கு […]

இலங்கை

திருகோணமலையில் தொடர் கொள்ளை – சுற்றிவளைக்கப்பட்ட கும்பல்

  • July 28, 2023
  • 0 Comments

பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இன்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை- மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியதாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்ற நிலையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்தபோது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து தண்ணீர் மோட்டார் மற்றும் கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 20 […]

error: Content is protected !!