கருத்து & பகுப்பாய்வு

சிங்கப்பூரில் வீட்டை வாடகைக்கு எடுப்பது எப்படி?

  • August 8, 2023
  • 0 Comments

நீங்கள் எந்த வகையான தங்குமிடத்தை வாங்க முடியும் என்பதைத் தீர்மானிக்கவும். சொந்தமாக தங்குமிடத்தைத் தேடுங்கள் அல்லது ஒரு முகவரைப் பயன்படுத்தவும். உரிமையாளர் அல்லது முகவருடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டவும். உங்களின் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து உங்கள் புதிய வீட்டை அணுகவும். சிங்கப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க, உங்கள் முகவர் அல்லது குத்தகைதாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகள் அல்லது வீடுகளை ஆன்லைனில், ஏஜென்சி மூலமாக அல்லது தெருவில் “வாடகைக்கு” போஸ்டர்களை சரிபார்ப்பதன் மூலம் காணலாம். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா வானில் தோன்றிய மர்ம ஒளி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • August 8, 2023
  • 0 Comments

விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா வானில் நேற்று இரவு மர்ம ஒளி அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவதானிக்கப்பட்டது இது விண்கல் அல்ல எனவும் அது ரஷ்ய ரொக்கெட் எனவும் தெரியவந்துள்ளது. மெல்போர்னில் இருந்து மவுண்ட் புல்லர் வரை வசிப்பவர்கள் இந்த பிரகாசமான ஒளியைக் கண்டதாக தெரிவித்துள்ளனர். அதனை 30 முதல் 40 வினாடிகள் வரை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்திரேலிய தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்ணில் இருந்து பூமிக்கு வரும் ரஷ்யாவின் சோயுஸ்-2 ரொக்கெட்டாக இருக்கலாம் என்பதற்கு பல […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் 40,000 ற்கும் அதிகமான போலி வைத்தியர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கைமுழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளது. பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படும் அவர்கள் எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். இது பாரிய பாரதூரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் வைத்தியர் சமில் […]

வட அமெரிக்கா

ஏப்பம் விட்டு கின்னஸ் உலகச் சாதனை படைத்த பெண்

  • August 8, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரில் ஏப்பம் விட்டு Kimberly Winter என்ற பெண் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இத்தாலியின் எலிசா கெக்னொனி (Elisa Cagnoni) 2009ஆம் ஆண்டு அத்தகைய சாதனையைப் படைத்திருந்தார். கலக்கும் சாதனம், சில வகை மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை விட கிம்பர்லியின் ஏப்பம் மிகச் சத்தமாக இருந்ததாக கின்னஸ் உலகச் சாதனை அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. சாதனை செய்யத் தயாராவதற்கு முன், கிம்பர்லி காலை உணவுக்குப் பிறகு காப்பியும் பீரும் அருந்தியுள்ளார். சத்தமாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அதிரடி நடவடிக்கை எடுத்த Facebook – Instagram! 27 மில்லியன் பதிவுகள் நீக்கம்

  • August 8, 2023
  • 0 Comments

Instagram மற்றும் Facebook சமூக வலைதளங்களில் இருந்து, கொள்கைகளை மீறியதாகக் கூறி, 27 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் மெட்டா நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் இணையத்தில் கோடிக்கணக்கான பதிவுகள் பதிவேற்றப்படுகிறது. இதில் அதிகப்படியான பதிவுகள் தவறானதாகவும், போலியானதாகவும், மோசமான கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இப்படி Facebook மற்றும் Instagramஇல் லட்சக்கணக்கான பதிவுகள் இருந்து வரும் நிலையில், இதை அதிரடியாக நீக்கும் பணியில் மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக கடந்த ஜூன் மாதத்தில் Facebook மற்றும் Instagramஇல் பதிவிடப்பட்ட […]

ஆசியா

சிங்கப்பூரில் கடன் கொடுத்து சிக்கிய 174 பேர் – விசாரணைகள் தீவிரம்

  • August 8, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் கொடுத்த சந்தேகத்தின் பேரில் 174 நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பொலிஸார் இதற்கான குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு சிக்கியவர்கள் 15 வயது முதல் 71 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் கடந்த ஜூலை 23ஆம் திகதி தொடங்கிய அதிரடி சோதனை தொடர்ந்து 5 நாட்கள் நடந்தது. அதில் 15 பேர் பேர் இணைய விளம்பரத்தை பார்த்து, அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்ற ஆசையுடன் ஏமாந்து […]

இலங்கை

வெள்ளவத்தையில் கால்பந்து போட்டியில் கடும் மோதல் – பலர் காயம்

  • August 8, 2023
  • 0 Comments

வெள்ளவத்தையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்து போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் ஜனாதிபதி – பிரதமரை வெறுக்கும் மக்கள்

  • August 8, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Élisabeth borne ஆகியோரின் பிரபலத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது (popularité) குறித்த விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மக்ரோன் சென்ற மாதம் பெற்றிருந்த அதே 29 புள்ளிகளுடன் தொடர்ந்தும் உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்குள் சிக்கியுள்ள மக்ரோன் தனது பிரபலத்தன்மையை தக்க வைக்க போராடி வருகிறார். இதேவேளை, பிரதமர் Élisabeth borne, சென்ற மாதத்தை விட இம்மாதம் 1 புள்ளி அதிகமாக பெற்றுள்ளார். தற்போது அவர் 26 புள்ளிகளைப் பெற்றுள்ளார். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி பெறும் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

  • August 8, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணத்தில் வாழும் மக்களுக்கு சில நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது சமூக உதவி பணத்தை பெற்று வாழ்ந்து வருகின்றவர்கள் நடைமுறைகளை கடைப்பிடிக்கப்படாத பட்சத்தில் கொடுப்பனவுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் பெறுகின்ற ஒருவர் சமூக உதவி திணைக்களமானது இவருக்கு ஒரு நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனத்துக்கு சமூக உதவி பணத்தை பெறுகின்றவர்கள் செல்லாது விட்டால் அவர்களுக்கு வழங்குகின்ற சமூக உதவி பணத்தில் சில குறைப்புகளை மேற்கொள்வது […]

இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம்

  • August 8, 2023
  • 0 Comments

இலங்கையில் வறட்சியான வானிலை காரணமாக பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈட்டை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பயிர்ச்செய்கை பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகளை ஆரம்பிக்குமாறு விவசாயம் மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு வெலிஓயா நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது குறிப்பிட்டளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்மூலம் 15 – 20 வீதமான செய்கைகளை பாதுகாக்க […]

error: Content is protected !!