இலங்கை செய்தி

உலக சிறுவர் சமாதான மாநாட்டில் சிறந்த உரைக்கான விருதை வென்ற இலங்கை மாணவி

  • August 8, 2023
  • 0 Comments

உலக சிறுவர் அமைதி மாநாட்டில் சமாதானம் தொடர்பான சிறந்த உரைக்கான விருதை வென்ற ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர நாட்டிற்கு வந்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற 04ஆவது உலக சிறுவர் சமாதான மாநாட்டில் இவ்விருதை அவர் பெற்றுக்கொண்டார். அந்த மாநாட்டில் இலங்கையர் ஒருவர் கலந்து கொண்டதும் இதுவே முதல் முறை. வயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஆர்.எஸ்.கஸ்மிரா ஜயவீர, உலக அமைதியை நிலைநாட்ட கல்வி மற்றும் மொழிக்கல்வி மூலம் எவ்வாறு குழந்தை […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் ‘லியோ’ 2 பாகங்களாக வருகின்றதா?

  • August 8, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் தற்போது காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்திற்கான சில பேட்ச் ஒர்க் காட்சிகளை படமாக்குகிறார். இந்த நிலையில் லியோ படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிளைமாக்ஸ் இரண்டாம் பாகமாக வெளிவர இருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பெரிய சலசலப்பு கிளம்பியுள்ளது. தற்போது ‘கைதி 2’, ‘சந்திரமுகி 2’, ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ மற்றும் ‘கேப்டன் மில்லர் 2’ போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வருகின்றன. இப்போது அந்த வரிசையில் முதல் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் நடந்த விமான விபத்து – PT6 விமானங்கள் பறப்பதற்கு தடை

  • August 8, 2023
  • 0 Comments

அனைத்து PT – 6 பயிற்சி விமானங்களின் பறப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது. திருகோணமலையில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த விசேட குழுவின் அறிக்கை வரும் வரை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்று நாடாளுமன்றத்திலும் விமான விபத்து குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது நீர் தாக்குதல் மேற்கொண்ட சீனா

  • August 8, 2023
  • 0 Comments

சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே சர்ச்சைக்குரிய சூழல் நிலவி வருகிறது. பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது சீன கடலோர காவல்படை நீர் தாக்குதல்களை நடத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சீனாவுக்கு பிலிப்பைன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சம்பவம் குறித்து விசாரிக்க பிலிப்பைன்ஸின் சீன தூதுவர் வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தனது பிராந்திய கடற்பரப்பை மீறியதாக சீனா கூறுகிறது, எனவே தேவையான கட்டுப்பாடுகளை எடுத்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, […]

இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 56 மத குருமார்கள் சிறையில்! வெளியான அதிர்ச்சி தகவல்

கொலை, பலாத்காரம், பாரிய பாலியல் துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் புதையல் தோண்டல் ஆகிய குற்றச்சாட்டில் 56 மதகுருமார்கள் சிறையில் உள்ளதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜயரத்ன மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து மதகுருமார்கள், 02 மௌலவிகள் […]

உலகம்

டெஸ்லா நிறுவன தலைமை நிதி அதிகாரியாக இந்தியர் நியமனம்!

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக (சிஎப்ஓ) இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாகவே அமெரிக்க டாப் நிறுவனங்களில் இந்தியர்களுக்கு டாப் பதவிகள் வழங்கப்படும் நிலையில், அதில் இவரும் இணைந்துள்ளார். உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் எனப் பல நிறுவனங்களை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர கடந்த ஆண்டு தான் இவர் ட்விட்டர் நிறுவனத்தையும் வாங்கியிருந்தார். இதில் டெஸ்லா […]

ஆசியா

பாகிஸ்தானில் வெடித்து சிதறிய நிலக்கண்ணி வெடி! 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நிலக்கண்ணி வெடியில் வாகனம் சிக்கிய விபத்தில் யூனியன் கவுன்சில் தலைவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்கட்டார் பகுதியின் ஒன்றிய கவுன்சில் தலைவர் இஸ்தியாக் யாகூப் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்றிரவு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் பஞ்ச்குர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த […]

இலங்கை

புத்தளத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலம் மீட்பு!

புத்தளத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை மீட்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளின்படி, கடற்படை டைவர்ஸ் ஆதரவுடன் திமிங்கலம் மீட்கப்பட்டது. தீவுக்கு அருகில் கரை ஒதுங்கிய திமிங்கலம்.20 அடி நீளமுள்ள ‘மின்கே திமிங்கலம்’ ஆகும்.

கருத்து & பகுப்பாய்வு

வாஸ்குலர் டிமென்ஷியா என்றால் என்ன தெரியுமா?

  • August 8, 2023
  • 0 Comments

உயர் இரத்த அழுத்தமானது நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதாவது நீண்டகாலத்திற்கு மூளை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இது குறித்து நடத்தப்பட்டுள்ள ஓர் ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் எவ்வாறு தொடர்ந்து மூளையில் தாக்கம் செலுத்துகிறது. இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது, இதன் விளைவாக வாஸ்குலர் டிமென்ஷியா எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வுகள் இங்கிலாந்தில் நரம்பியல்நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரின் சிகிச்சைக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மான்செஸ்டர் […]

வாழ்வியல்

சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடலாமா?

சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நம் அனைவருக்கும் சூடச் சூட உணவு சாப்பிடுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது பயன் தருமா. சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும். உணவில் ஸ்போர் (Spore) என ஒன்று இருக்கும். அதாவது அதை பக்டீரியாவின் குழந்தை எனலாம். முதல்முறை சமைக்கும்போது, அந்தச் சூட்டில் அந்த ஸ்போர் செயலிழந்து […]

error: Content is protected !!