மத்திய கிழக்கு

பாபி திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு : அரபு நாடுகளில் ஒளிபரப்ப தடை!

  • August 11, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் “பாபி” திரைப்படம் அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதன்படி இந்த படத்தை அந்த நாடுகளில் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், லெபனானிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. “சமூக நெறிமுறைகளை” பாதுகாப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக குவைத் அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், படம் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கிறது என்று லெபனான் குறைக்கூறியுள்ளது.  சில வாரங்களுக்கு முன் வெளியான இந்தப் படம் இதுவரை […]

உலகம்

EG.5 வைரஸ் அச்சம் தரக்கூடிய அளவில் இல்லை – WHO

  • August 11, 2023
  • 0 Comments

சீனா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வரும் EG.5 கொரோான வைரஸ் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரியவில்லை என கூறப்படுகிறது. கொரோனா தொற்றின் புதிய  மாறுபாடு, அமெரிக்காவில் 17% க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் திரிபு,  சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் கனடா போன்றவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம், “ஒட்டுமொத்தமாக, தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற Omicron வம்சாவளி […]

உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் பாரிய மாற்றம்!

  • August 11, 2023
  • 0 Comments

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேநேரம், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.78 […]

வாழ்வியல்

பச்சை குத்தியவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

  • August 11, 2023
  • 0 Comments

சிவப்பு ரத்த உயிரணுக்களை 6 வாரங்களுக்கும் நுண்தட்டணுக்களை (platelets) 7 நாள்களுக்கும் மட்டுமே வைத்திருக்க முடியும். மருத்துவமனைகளில் தினமும் 400 பை ரத்தம் தேவைப்படும். ஆரோக்கியமானவர்கள் ரத்த தானம் செய்ய முன்வரலாம். தற்போது சிங்கப்பூர்வாசிகளில் 1.8 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த தானம் செய்கிறார்கள். ஆனால் இரத்த தானம் செய்வதில் சிலருக்குச் சந்தேகங்கள் இருக்கலாம். பச்சை குத்தியவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது. யார்யார் ரத்த தானம் […]

இலங்கை

இலங்கை சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்படும்?

  • August 11, 2023
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இன்று (11.08) கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும், சாதகமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.  

வட அமெரிக்கா

ஹவாய் வனப்பகுதியில் பற்றிய எரியும் நெருப்பு – 1,700 வீடுகள் எரிந்து நாசம் 53 பேர் பலி

  • August 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மயுய் என்ற இடத்தில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகின. வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாக ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக இருந்தது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் […]

இலங்கை

வங்கி முறைக்கேடுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊழல் மோசடிகள் பற்றி குறிப்பிடவில்லை!

  • August 11, 2023
  • 0 Comments

நாட்டின் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை வங்கியில் தடயவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமியைப் போன்ற பருவநிலை கொண்டிருந்த செவ்வாய் கிரகம் – ஆய்வில் வெளியான தகவல்

  • August 11, 2023
  • 0 Comments

ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற பருவநிலை இருந்ததாக தெரியவந்துள்ளது. தற்போது அதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளிர்ச்சியான, வறண்ட பருவங்கள், இரண்டும் மாறி மாறி அங்கு வந்திருக்கின்றன. செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடமாக இருந்திருக்கலாம் என்று Nature சஞ்சிகை வெளியிட்ட கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. நாசாவால் வெளியிடப்பட்ட அந்தப் படம், வண்டல் பாறைகளில் அறுகோணப் படிம வடிவங்களைக் காட்டுகிறது. இன்று செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஒரு வறண்ட பாலைவனமாக […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்றில் ஒலித்தது பாடகி அசானியின் பெயர்!

  • August 11, 2023
  • 0 Comments

“இந்திய Zee Tamil (ஜி தமிழ்) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்வில் பங்கேற்றுள்ள புசல்லாவை, நயாபன தோட்ட சிறுமி அசானி தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் […]

இலங்கை

ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயன்ற இலங்கையர் கைது!

  • August 11, 2023
  • 0 Comments

போலி விசா மூலம் டுபாய் வழியாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டா பெண்ணொருவருக்கு  35 இலட்சம் ரூபாவை கொடுத்து போலியான விசாவை பயன்படுத்தி அவர் தப்பிச் செல்ல முயன்றது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய குறித்த இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்துள்ளனர். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு உகாண்டா சென்று அங்குள்ள […]

error: Content is protected !!