சிறிய ஸ்ரீபாதையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை
எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13) காலை 100 அடி பாறையிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டவர் ஒருவரை எல்ல சுற்றுலாப் பொலிஸார் பெரும் முயற்சியுடன் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டு தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் என பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப கலுபான தெரிவித்தார். பிரித்தானியப் பிரஜையான இந்த 27 வயதுடைய வெளிநாட்டவர் சிறிய ஸ்ரீபாத மலையில் இருந்து சூரிய உதயத்தின் வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் தனது கைத்தொலைபேசியில் படம்பிடித்துக் […]













