கையடக்க தொலைபேசி தருவதாக கூறி அரச அதிகாரி செய்த மிக மோசமான செயல்
ராஜஸ்தானில் பொது சுகாதார பொறியியல் துறையின் காசாளரால் இளம் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 17 வயது சிறுமி சில்மிஷம் செய்யப்பட்டதாகவும், 35 வயதான காசாளர், கையடக்கத் தொலைபேசியை இலவசமாக தருவதாகக் கூறி, காரில் அழைத்துச் சென்று மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் காசாளரைப் பிடித்து திணைக்களத்தின் பிரதான வாயிலுக்கு முன்னால் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அப்பகுதி மக்கள் தாக்கியதை அடுத்து […]













