உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

  • August 14, 2023
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 1% குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க டொலர் வலுவடைந்து, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இதன்படி, உலக சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 85.74 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 82.12 டொலராகவும் குறைந்துள்ளது.

பொழுதுபோக்கு

மகள் வயது நடிகையுடன் எல்லை மீறிய சூப்பர் ஸ்டார்.. வைரலாகும் வீடியோ

  • August 14, 2023
  • 0 Comments

சிரஞ்சீவி இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் 11ம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வந்தது. இந்த படம் அஜித் நடித்த வேதாலம் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சக நடிகை, அதுவும் 30 வயதுக்குட்பட்ட நடிகையின் இடுப்பை கிள்ளி ஒரு காட்சியில் நடித்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேவேளை, குறித்த படத்தின் ரிலீஸின் போதே, […]

இந்தியா

இந்தியாவில் சிகிச்சைக்காக வந்த 18 பேர் உயிரிழப்பு!

  • August 14, 2023
  • 0 Comments

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், கல்வா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 18 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனை அதிகாரிகள் நேற்று (13.08) இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 பெண்களும் அடங்குவர். மேலும், உயிரிழந்த 18 பேரில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறப்புகள் குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது, அவர்கள் முதலில் மரணத்திற்கு வழிவகுத்த […]

இலங்கை

இலங்கை உலக நாடுகளுக்கு 36 பில்லியன்களை செலுத்த வேண்டும்!

  • August 14, 2023
  • 0 Comments

உலக நாடுகளிடம் இருந்து இலங்கை பெற்ற 36 பில்லியன் டொலர் கடன் முதிர்ச்சியடைந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனால் அவற்றை செலுத்துவதற்கு திறைசேரியிடம் பணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “கஜானாவில் பணம் இல்லை. இந்த சொற்ப பணத்தில், அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம், ஓய்வூதியம், செழிப்பு உள்ளிட்ட மானியங்கள் வழங்கப்பட்டன. […]

இலங்கை

கல்வியங்காடு கொலை சம்பவம் – வெளியான அதிர்ச்சி பின்னணி!

  • August 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற கொலையின் பின்னணியில் 8 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உட்பட 8 பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியும் பொலிஸ் நிலையத்தில் தாயாருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று அறியக் கிடைத்துள்ளது. கொலையான நபர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய […]

இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு மீண்டும் கோரிக்கை!

  • August 14, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக சங்கத்தின் அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறுகிறார். வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம் எனவும் […]

ஆசியா

இந்தோ. மோட்டார் வண்டிகளில் சுற்றும் காதல் ஜோடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டம்!

  • August 14, 2023
  • 0 Comments

உலகில் அதிகரித்த இஸ்லாமிய மக்கள் வாழும் பிரதேசங்களில் ஒன்றாக இந்தோனேசியா -சுமாத்ரா தீவின் மேற்கு மூலையில் ஆச்சே எனும் மாகாணம் விளங்குகின்றது. உலகில் கட்டுக்கோப்பான இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பேணும் பிரபலமான பிராந்தியமாக ஆச்சே மாகாணம் இன்றளவும் பின்பற்றுகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.இங்கு ஆண் ,பெண் வாகனப் பயணங்கள் தனித்தனியாக அமைய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சி நடைபெறும் இந்த மாகாணத்தில் தண்டனையாக பொது இடத்தில் வைத்து கசையடிகள் வழங்குவது பல்வேறு சட்டங்கள் […]

வட அமெரிக்கா

ஹவாயில் காட்டுத்தீயால் பலியானோரின் எண்ணிக்கை 93ஆக உயர்வு – மீட்பு பணி தீவிரம்

  • August 14, 2023
  • 0 Comments

அமெரிக்க மாகாணங்களுள் ஒன்றான ஹவாய் தீவுகள் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீவுக்கூட்டங்களின் 2வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவில் உள்ள ஹலைனா பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ மளமளவென நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. தீவு பகுதி என்பதால் அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டு இருந்தன. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அங்கு தீப்பிடித்து எரிந்தன. இதனால் ஏராளமானோர் […]

இலங்கை

படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகள் – 17வது ஆண்டு நினைவு நாள்

  • August 14, 2023
  • 0 Comments

செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கத்தால் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.    

ஆசியா

ஈரான்- ஷியா முஸ்லிம்களின் கோவிலில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்- ஒருவர் பலி

  • August 14, 2023
  • 0 Comments

ஈரானின் தெற்கு நகரமான சிராசில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஷா செராக் ஆலயத்திற்குள் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவித்தது. சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதித்துறை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த […]

error: Content is protected !!