இலங்கை

சிங்கப்பூர் பயணமானார் ரணில்!

  • August 21, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21.08) அதிகாலை சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தில் ,  ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். ஜனாதிபதி தனது விஜயத்தின் போது, ​​சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யெகெப்பை சந்திக்கவுள்ளார். அத்துடன்  சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் […]

பொழுதுபோக்கு

‘கேப்டர் மில்லர்’ இயக்குனருடன் மீண்டும் இணையும் பெரிய வீட்டு மாப்பிள்ளை…

  • August 21, 2023
  • 0 Comments

‘கேப்டன் மில்லர்’ இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராக்கி, ‘சாணிக் காயிதம்’  ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள   திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது. இப்படம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி […]

இலங்கை

திருகோணமலையில் பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல் – திடீரென மாயமான மாடு

  • August 21, 2023
  • 0 Comments

திருகோணமலை – பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே திலகரத்தின என்பவருடைய மாடு காணாமல் போய் உள்ளதாக கடந்த 2023/06/ 26 ஆம் தேதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முறைப்பாட்டினையடுத்து இன்னுமொரு நபர் குறித்த மாட்டை வளர்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த போது […]

ஆசியா

சிங்கப்பூரில் வழக்கில் வெற்றிபெற்ற வெளிநாட்டு ஊழியர் – தமிழருக்கு கிடைக்கும் நஷ்டஈடு

  • August 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் லொரியின் பின்புறத்தில் இருந்து தவறி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியருக்கு காயம் ஏற்பட்டது. அதற்காக 100,000 சிங்கப்பூர் டொலர் நஷ்டஈடு கோரி நிறுவனத்தின் மீது அவர் வழக்கு தொடுத்துள்ளார். லொரியின் பின்புறத்தில் 24 பேருடன் வேலையிடத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கீழே இறங்கும் போது அவர் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் ராமலிங்கம் முருகன் வாதிட்டார். இந்நிலையில், முருகன் மீது […]

வாழ்வியல்

உடல் எடையை அதிகரிக்கும் மன அழுத்தம்!

  • August 21, 2023
  • 0 Comments

மன அழுத்தம் மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தெளிவாகத் தெரியும். நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது, ​​நம் உடல் மிகுந்த கடினமான சூழலை எதிர்கொள்கிறது. இது நம் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோனின் அதிக அளவு உணவுக்கான ஆசையை அதிகரிக்கிறது, குறிப்பாக இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகள். இதன் விளைவாக, நாம் எடையை அதிகரிக்க முடியும். இதை இன்னும் விரிவாக ஆராய்வோம். 1. மன அழுத்தம் மற்றும் பசி: நாம் […]

இலங்கை

இலங்கையில் மதுபோதையில் பாடசாலைக்கு வந்த சிறுமி – நீதிமன்றம் விடுத்த உத்தரவு

  • August 21, 2023
  • 0 Comments

இலங்கையில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, ஏதேனும் ஒருவர் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது, அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு இருப்பின், அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், குறித்த சிறுமி தொடர்பில், விசேட சட்ட வைத்திய […]

பொழுதுபோக்கு

‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…

  • August 21, 2023
  • 0 Comments

‘பாக்யலட்சுமி’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகியுள்ளார். தமிழ் சின்னத்திரை பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் ரித்திகா. ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலின் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. பாக்யாவின் ஒவ்வொரு செயலுக்கும் உறுதிதுணையாக ரத்திகாவின் கதாபாத்திரம் இருந்து […]

ஐரோப்பா

போர்ச்சுகலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களை வெளியேற்ற முடியாமல் திண்டாட்டம்

  • August 21, 2023
  • 0 Comments

ஒகஸ்ட் 1 முதல் 6 வரை லிஸ்பனில் நடைபெற்ற உலக இளைஞர் தினத்திற்காக போர்ச்சுகல் நாட்டிற்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர், நிகழ்வு முடிந்தவுடன் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்குப் பதிலாக நாட்டில் ஒழுங்கற்ற முறையில் தங்கியுள்ளனர். 1.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் நாட்டிற்று வந்துள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் விதிகளைப் பின்பற்றவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தரப்பில் விளக்கமளிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏராளமான வெளிநாட்டினர் திரும்பி வராதது தெரியவந்தது. அவர்கள் போர்ச்சுகலில் தங்கி அல்லது மற்றொரு […]

ஐரோப்பா

பிரித்தானிய வீதிகளில் AI கமராக்கள் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • August 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட AI கமராக்களின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, 3 நாட்களில் வீதி பாதுகாப்பு விதிகளை மீறிய 297 ஓட்டுநர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. AI கமராவின் இந்த ஓட்டுநர்களை பொலிஸாருக்கு அடையாளம் காட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டெவன் மற்றும் கார்ன்வால் பகுதி பொலிஸார் இதை பொருத்தி சோதனை ஓட்டம் பார்த்துள்ளனர். அதில் வாகனம் ஓட்டியபடி கையடக்க தொலைபேசிகளில் பேசியவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களை AI கமரா சுட்டிக்காட்டியுள்ளது. அந்த காட்சியை மனிதவளத்தை […]

ஐரோப்பா

பிரான்ஸில் கொரோனா அச்சம் – மீண்டும் தடுப்பூசி

  • August 21, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கொவிட் 19 தொற்றுக்கு எதிராக மீண்டும் தடுப்பூசி போடப்படும் பணி ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. எளிதில் தொற்றுக்கு உள்ளாகக்கூடியவர்களை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. இறுதியாக தடுப்பூசி போட்டு ஆறு மாதங்கள் நிறைவு செய்தவர்கள் அல்லது, ஆறு மாதங்களுக்கு முன்னர் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த புதிய தடுப்பூசியினை போட்டுக்கொள்ள ஏதுவானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்த தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாக உள்ளது. முதற்கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு […]

error: Content is protected !!