இந்தியா

6 வயது சிறுமிக்கு பள்ளி பேருந்தில் நேர்ந்த கொடுமை! போலீசார் தீவிர விசாரணை

டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமி பள்ளி பேருந்தில் மூத்த மாணவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை எழுத்துப்பூர்வமாக பேகம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த புகாரில் “பாதிக்கப்பட்ட சிறுமியை பள்ளி பேருந்தை விட்டு […]

செய்தி விளையாட்டு

Asia Cup Match 04 – ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய வெற்றியிலக்கு

  • September 3, 2023
  • 0 Comments

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லாகூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேசம் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.டாஸ் […]

உலகம்

ஒடிசாவில் இடி, மின்னலுக்கு 12 போ் பலி, 14 பேர் காயம்

ஒடிசாவில் பெய்த கனமழையின்போது இடி,மின்னல் தாக்கி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 12 போ் பலியாகியுள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாநிலம் முழுவதிலும் இருந்து எட்டு கால்நடைகள் பலியாகியுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதிக் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சனிக்கிழமை சுமாா் […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞன் கைது!

ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக ஜோர்தானுக்குத் தப்பிச் செல்வதற்காக அவர் இன்று (03) அதிகாலை 03.30 மணியளவில் எயார் அரேபியா விமானமான ஜி.-9501 இல் செல்வதற்காக கட்டுநாயக்க […]

இலங்கை

குடிபோதையில் சாரதி பல வாகனங்கள் மோதியதில் ஒருவர் பலி: 06 பேர் படுகாயம்

எம்பிலிபிட்டிய, கல்வாங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

இயக்குனர் சேரனுடன் இணையும் சுதீப் ! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கன்னட சினிமாவின் பாட்ஷாவான கிச்சா சுதீப் ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘மேக்ஸ்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது, ​​நடிகர் தமிழ் மூத்த இயக்குனர் சேரனுடன் ஒரு புதிய பெரிய படத்திற்காக இணைந்துள்ளார். இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதற்கு தற்காலிகமாக ‘கிச்சா 47’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகரின் பிறந்தநாளான நேற்று இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் […]

இலங்கை

மீட்கப்பட்ட பழ வியாபாரி : ஐவர் கைது

  • September 3, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் சனிக்கிழமை உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து வான் ஒன்றில் யாழ்ப்பாணம் […]

வட அமெரிக்கா

கனடாவில் தேவாலயம் ஒன்றில் குண்டு பீதி: பதற்றத்தில் மக்கள்!

  • September 3, 2023
  • 0 Comments

கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் குண்டுப் பீதி காரணமாக மக்கள் அச்சமடைந்திருந்தனர். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பகுதி தேவாலயம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மக்கள் பதற்றமடைந்தனர். இருப்பினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இந்த தகவல் ஓர் போலியான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த குண்டு தொடர்பான தகவல் வெளியான போது தேவாலயத்திற்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.எவ்வாறெனினும் […]

மத்திய கிழக்கு

உலகெங்கிலும் உள்ள தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்ட நைஜீரிய ஜனாதிபதி

  • September 3, 2023
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள நைஜீரியாவின் தூதர்களை திரும்ப அழைக்க ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் Ajuri Ngelale தெரிவிக்கையில், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வருங்கால பார்வையாளர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அனைத்து தூதர்களையும் திரும்ப அழைத்த நிலையில், நைஜீரியாவின் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள […]

தமிழ்நாடு

டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவின் 2ம் பதிப்பில் இவ் ஆண்டுக்கான மாணவர் முயற்சியாளர் விருது

  • September 3, 2023
  • 0 Comments

ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 நிகழ்ச்சியில் – மாணவர்களின் கண்ணைக் கவர்ந்த லேசர் ஷோ.கோவை பட்டினம் பகுதியில் உள்ள SSVM நிறுவனங்கள் ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023″க்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் இருந்து ஏண்டர் பிரனவ்,டிஜிட்டல் கிரியேட்டர்,போர்ட் கம்பெனியின் CEO ,காமெடி”என பல்வேறு துறைகளில் இருந்து வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து 15″ நிமிடங்களுக்கு மேலாக லேசர் சோ நிகழ்ச்சி […]

error: Content is protected !!