இந்தியா செய்தி

ஜி20 விருந்தில் பங்கேற்க 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு

  • September 7, 2023
  • 0 Comments

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜி20 மாநாட்டில் சீன அதிபர் […]

இலங்கை செய்தி

இலங்கையின் காபி உலகில் சிறந்த இடத்தில் இருக்கின்றது!! ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் புகழாரம்

  • September 7, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் கஹ்லட் அல் அமிரி, இலங்கையின் காபி உலகில் சிறந்ததொரு இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் காபி பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையின் காபியை சர்வதேச சந்தையில் பெறுமதி சேர்ப்பு பொருளாக அறிமுகப்படுத்துவதன் மூலமும் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது விவசாயத் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் […]

இலங்கை செய்தி

செக் குடியரசிடம் இருந்து இலங்கைக்கு குரங்குகள் மற்றும் பறவைகள் நன்கொடை

  • September 7, 2023
  • 0 Comments

செக் குடியரசு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய மூன்று “ஈமு” பறவைகளும் நான்கு “ரிங் டெயில் லெமூர்” குரங்குகளும் நேற்று இரவு நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அவைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இந்த 4 மாத வயதுடைய “ஈமு” பறவைகள் அவுஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்க முடியாத பறவைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளன. ரிங்-டெயில் லெமூர் என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட ஒரு அழிந்துவரும் இனமாகும். இரண்டு வயதுடைய இரண்டு ஆண் லெமூர் குரங்குகளும், […]

ஆசியா செய்தி

நிலவுக்கான தனது பயணத்தை ஜப்பான் இன்று தொடங்கியது

  • September 7, 2023
  • 0 Comments

ஜப்பான் நிலவுக்கான தனது பயணத்தை இன்று தொடங்கியது. இதற்கு முன் மூன்று முறை, ஜப்பான் நிலவை ஆய்வு செய்யத் தயாரானது, ஆனால் வானிலை பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஜப்பான் தனது நிலவில் ஆய்வு செய்யும் ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் தனது நிலவு ஆய்வுக்கு “மூன் ஸ்னைப்பர்” என்று பெயரிட்டுள்ளது. ஜப்பானின் திட்டப்படி, இந்த பயணம் வெற்றிகரமாக நிலவை அடைந்தால், அடுத்த பிப்ரவரி […]

இலங்கை செய்தி

நாடாளுமன்றத்தில் டெண்டர் மாஃபியா தொடர்பில் வெளியான தகவல்

  • September 7, 2023
  • 0 Comments

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அதிகாரியொருவரினால் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் மாஃபியா தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, சம்பந்தப்பட்ட அதிகாரி தனக்கு நட்பான நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுப்பதாக கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார். அதற்கு சற்று முன்னர் குறித்த அதிகாரி திறமையான அதிகாரி என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதாக அமைச்சர் […]

இலங்கை

”சரணடைந்த பிள்ளைகளையே கொக்குத்தொடுவாயில் புதைத்திருக்கிறார்கள்”: து.ரவிகரன்

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள்: பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இரண்டாம் நாளான இன்றையதினம் (07.09.2023) அகழ்வு பணி நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து நடைபெற்றிருந்தது. குறித்த இடத்திற்குள் செல்ல முடியாது. இருந்தாலும் ஒரு தடவை அருகிலே நின்று பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. நாங்கள் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் குறுந்திரைப்படத்தில் நடித்த கம்சத்வனி அவர்களுக்கு தேசிய விருது

  • September 7, 2023
  • 0 Comments

திருகோணமலை-கிளிவெட்டி மகா வித்தியாலயத்தினால் தயாரிக்கப்பட்டு திரு.புஹாரி நளீர் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான “பள்ளிக்கூடம் ” எனும் குறுந்திரைப்படத்தில் நடித்த செல்வி.கோ.கம்சத்வனி அவர்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது குவியம் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. அவ்விருது மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.Z.M.M.நளீம் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இக்குறுந்திரைப்படமானது சமூகத்தில் மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்க விழுமியங்களை வளர்த்தெடுக்கும் நோக்கிலும் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலும் திரு.பா.கோணேஸ்வரராசா அதிபர் மற்றும் இயக்குனரான […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

  • September 7, 2023
  • 0 Comments

வடமேற்கு கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு எல்லை சோதனைச் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். “செப்டம்பர் 6 அன்று, சமீபத்திய ஆயுதங்களுடன் கூடிய ஒரு பெரிய குழு பயங்கரவாதிகள் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கலாஷ், மாவட்ட சித்ராலின் பொதுப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு பாகிஸ்தான் இராணுவ நிலைகளைத் தாக்கினர்” என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

இலங்கை

தனது ஓய்வூதிய பணத்தில் தனிநபர் ஒருவரின் முன் மாதிரியான செயல்பாடு! மகிழ்ச்சியில் மாணவர்கள்

மணி மாஸ்டர் விருதுக்கான திருக்குறள் போட்டியின் பரிசலிப்பு விழா இன்றைய தினம் வியாழக்கிழமை(7) மதியம் 1.45 மணியளவில் மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. மணி மாஸ்டரின் புதல்வரும் பொறியியலாளருமான விமலேஸ்வரன் தலைமையில் குறித்த பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கும் வகையிலும் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் 4 பிரிவுகளில் குறித்த போட்டி இடம்பெற்றது. -முதல் இடத்தை பெற்ற 3 போட்டியாளர்களுக்கு தலா 50 ஆயிரம் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க கைதி தப்பியோட்டம் – துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

  • September 7, 2023
  • 0 Comments

அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், ஃபிலடெல்ஃபியாவிற்கு 50 கிலோமீட்டர் தொலைவில் பொகோப்சான் டவுன்ஷிப் பகுதியில் உள்ள செஸ்டர் கவுன்டி சிறைச்சாலையில் […]

error: Content is protected !!