ஆசியாவில் போர் மூண்டால் சீனாவிடம் தோல்வியை தழுவும் அமெரிக்கா!
சீனா மற்றும் தைவானுக்கு இடையே போர் மூளும் பட்சத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் நிச்சயமாக சீனாவின் கையில் அமெரிக்கா தோல்வியை தழுவும் எனக் கூறப்படுகிறது. பென்டன் வெளியிட்டுள்ள இரகசிய அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் வெளியாகியுள்ள ஓவர்மேட்ச் ப்ரீஃப் (Overmatch brief) அறிக்கையில், அமெரிக்க போர் படைகள், முக்கிய போர்க்கப்பல்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளை கூட அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முன்பே அதனை ஊடுறுவ அல்லது முடக்க சீனாவால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]













