ஐ.நாடுகளின் கூட்டத்தொடர் முடிவடையும் முன் கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தையும் சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும்! சிறீதரன் நம்பிக்கை
கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிந்தது. பல்கலைக்கழக மாணவர்களும் தொல்பொருள் ஆய்வு திணைக்களத்தினை சேர்ந்தவர்களுடைய வழிகாட்டல் ஆலோசனைகளோடு நுணுக்கமாக தொல்பொருள் […]













