இந்தியா செய்தி

இந்தியாவின் உதவி: மஹியங்கனையில் கள மருத்துவமனை ஆய்வில் உயர் ஸ்தானிகர்.

  • December 12, 2025
  • 0 Comments

மஹியங்கனையில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (12) காலை சென்றுள்ளார். பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கம் இரண்டு நடமாடும் வைத்தியசாலைகளை செயற்படுத்த உதவியது. அவற்றில் ஒன்று மஹியங்கனை நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று இந்த (12) நடமாடும் வைத்தியசாலையை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார். ஊவா மாகாண ஆளுநர் கபில ஜெயசேகர, இந்திய துணை உயர் […]

உலகம் செய்தி

பிப்ரவரி தேர்தலுக்குப் பிறகு பதவி விலக விரும்பும் வங்கதேச ஜனாதிபதி

  • December 12, 2025
  • 0 Comments

பிப்ரவரி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது பதவிக் காலத்தின் பாதியில் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக வங்கதேச(Bangladesh) ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன்(Mohammad Shahabuddin) தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்(Mohammad Yunus) தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டதால் இவ்வாறு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், “நான் வெளியேற ஆர்வமாக உள்ளேன்” என்று அவர் டாக்காவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஷஹாபுதீன் ஜனாதிபதியாக மட்டுமன்றி வங்கதேச ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியாக உள்ளார், ஆனால் […]

இந்தியா செய்தி

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு – 11,718 கோடி ரூபா ஒதுக்கீடு.

  • December 12, 2025
  • 0 Comments

இந்தியாவில் 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை 11,718 கோடி ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (12) கூடியது. இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ நடத்த மத்திய அமைச்சரவை […]

உலகம்

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை கைது செய்தது ஈரான்!

  • December 12, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதியை (Narges Mohammadi) ஈரானிய அரசாங்கம் இன்று கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நர்கீஸ் முகமதியின் சகோதரரை மேற்கோள் காட்டி இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக  சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அறக்கட்டளை, வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் ( Khosrow Alikordi) நினைவு விழாவின் போது முகமதி “வன்முறையாக தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஈரானின் மிக […]

இலங்கை செய்தி

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக உயர்வு.

  • December 12, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை அனர்த்தம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் நாட்டில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடரினால் மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 4 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளானவர்களில், 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாண ஒப்பந்தம்: விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்ற புதிய திட்டம்.

  • December 12, 2025
  • 0 Comments

விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறுவதுடன், அவர்கள் வெறும் உற்பத்தியாளர்களாக மட்டும் நின்றுவிடாமல் தொழில்முனைவோராகவும் மாற்றமடைய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை விவசாயத் தொழில்முனைவோர் மன்றத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண சேதன விவசாய பொது பட்டியலிடப்படாத நிறுவனம் மற்றும் அக்ரோ பெனிபிட் லங்கா லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான முகாமைத்துவ மற்றும் செயற்பாட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள வாழை மற்றும் மாம்பழ சேகரிப்பு […]

உலகம் செய்தி

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் $586 மில்லியன் இழப்பு

  • December 12, 2025
  • 0 Comments

செப்டம்பர் மாதம் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை(K.P. Sharma Oli) ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் நேபாளத்தில்(Nepal) $586 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக அரசாங்க அறிக்கை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை 77 பேரைக் கொன்றது மற்றும் 2,000 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியது. பிரதமர் அலுவலகம், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், அரசியல்வாதிகளின் தனியார் குடியிருப்புகள் மற்றும் சில அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான நபர்களுக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் […]

இலங்கை செய்தி

ஜப்பான் சேவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கள வைத்தியசாலையில் சிகிச்சை.

  • December 12, 2025
  • 0 Comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர மருத்துவ சேவையை வழங்குவதற்காக, சிலாபம் பொலிஸ் மைதானத்தில் முழுமையாக பொருத்தப்பட்ட நடமாடும் கள வைத்தியசாலையை ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழு (JDR) நிறுவியுள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இன்றைய தினம் குறித்த வைத்தியசாலையை ஆய்வு செய்து, அவசரகாலத்தின் போது விரைவான நடவடிக்கை எடுத்த ஜப்பான் அரசாங்கத்திற்கும் ஜப்பானின் பேரிடர் நிவாரணக் குழுவினருக்கும் இலங்கை சார்பாக நன்றி தெரிவித்தார். இந்த கள வைத்தியசாலையில் கடந்த 04 […]

ஐரோப்பா செய்தி

8 வருட மர்மம் முடிந்தது: தாயைக் கொன்ற வழக்கில் மகனின் வாக்குமூலத்தால் நீதி!

  • December 12, 2025
  • 0 Comments

2016ஆம் ஆண்டு தனது மனைவி டான் ரோட்ஸைக் கழுத்தை அறுத்துக் கொன்ற குற்றத்திற்காக, பிரித்தானியாவின் ரெட்ஹில் பகுதியைச் சேர்ந்த தச்சன் ராபர்ட் ரோட்ஸ் (52) தற்போது குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டில் நடந்த முந்தைய விசாரணையில், ராபர்ட் ரோட்ஸ் தற்காப்புக்காகவே மனைவியைக் கொன்றதாகக் கூறி விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை நடந்தபோது 10 வயதுக்குட்பட்டிருந்த ராபர்ட் ரோட்ஸின் மகன் அளித்த புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சாட்சியத்தின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாயைக் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்

  • December 12, 2025
  • 0 Comments

ரஷ்யா தனது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் மீது சைபர் தாக்குதல் நடத்தியதாக ஜெர்மன் குற்றம் சுமத்தியுள்ளது. இதற்காக ரஷ்ய தூதுவருக்கும் அழைப்பு விடுத்து ஜெர்மனி அவரை வரவழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு ஒகஸ்டில் நடந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவ உளவுத்துறையே காரணம் என்றும் ஜெர்மன் கூறுகிறது. அத்துடன் பெப்ரவரி மாத கூட்டாட்சி தேர்தலில் தலையீடு செய்ய ரஷ்யா முயற்சித்ததாகவும் ஜெர்மன் குற்றம் சுமத்துகிறது. மேலும் ஐரோப்பிய நட்புகளுடன் இணைந்து ரஷ்யாவுக்கு […]

error: Content is protected !!