ஆசியா

பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்த தீர்மானம்

  • September 21, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது.தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் உள்ளார். இந்த நிலையில் , பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல்: ஆறு சந்தேகநபர்களுக்கும் பிணையில் செல்ல அனுமதி

  • September 21, 2023
  • 0 Comments

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் இன்று மாலை (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட […]

பொழுதுபோக்கு

”நா நினைக்கிறது சரியா தப்பானு தெரியல!… : தி ரோட் ட்ரெய்லர் வெளியீடு!

  • September 21, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில். திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தி ரோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.  

தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகைக்காகல் குவிந்த முதியவர்களை ஒருமையில் திட்டிய ஊழியர் (வீடியோ)

  • September 21, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், தூத்துக்குடியில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து வராத பெண்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை […]

இலங்கை

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச பொறிமுறைகுள் விசாரணைக்குட்படுத்தி நீதியினை பெற்றுதர வேண்டும்: து.ரவிகரன்

  • September 21, 2023
  • 0 Comments

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி இழைக்கப்படுமோ என்ற நிலையே காணப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார் . முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”இன்றைய தினம் உலக சமாதான தினமாகும் ஆனால் […]

இலங்கை

வாகனத்தை வழிமறித்து சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது

  • September 21, 2023
  • 0 Comments

பட்டா ரக வாகனத்தை வழிமறித்து , அதன் சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை , உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து , சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருந்தது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி , சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை […]

இந்தியா

 நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்!

  • September 21, 2023
  • 0 Comments

நாகபட்டினத்திற்கும் – காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை   எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என  கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடல்சார் சபை மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆகியவை இந்த படகுச் சேவையை ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் துறைமுக கால்வாய் தூர்வாரப்பட்டு பயணிகள் முனையம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு படகும் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தடை

  • September 21, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்காக்கள் அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை […]

இலங்கை

கோழி இறைச்சியின் விலையை குறைக்க தீர்மானம்!

  • September 21, 2023
  • 0 Comments

கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர்  நளின் பெர்னாண்டோவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை 1150 ரூபாவிற்கு விற்பனை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது.

இலங்கை

உள்ளுராட்சி சபை தேர்தல் : வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம்!

  • September 21, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (21.09) நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!