ஐரோப்பா

பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிக்க திட்டம்!

  • September 23, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக்   அடுத்த தலைமுறையினரை பாதுகாப்பதற்காக மேற்படி சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030 ஆம் ஆண்டில் புகைப்பிடிக்காதவர்கள் வாழும் தேசமாக பிரித்தானியாவை மாற்றும் வகையில் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக மின்னஞ்சல் மூலம்  ரொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கேரள ரசிகர்கள்

  • September 23, 2023
  • 0 Comments

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் எடிட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் லியோ படத்தின் தெலுங்கு, ஹிந்தி,மலையாளம், கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் குறித்து தவறாக பேசியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த கேரளா திரையுலக ரசிகர்கள் விஜய்க்கு எதிராக #KeralaBoycottLEO என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து […]

இலங்கை

மன்னாரில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  • September 23, 2023
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை […]

இலங்கை

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!

  • September 23, 2023
  • 0 Comments

முல்லைத்தீவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேரங்கண்டல் மங்கை நகர் பகுதியில், குறித்த சடலம் இன்று (23.09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என்பவர் ஆவார். மல்லாவி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

அடுத்த ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும்: சுசில் பிரேமஜயந்த

  • September 23, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஹோமாகம, பிடிபனவில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் பிரதான களஞ்சியசாலையில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள பிராந்திய மத்திய நிலையங்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படும் இடத்தை பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே பள்ளி சீருடைப் பொருட்கள் வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினர் பரப்பும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் […]

இலங்கை

பொருளாதா, தொழிநுட்ப ஒப்பந்தங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில்  பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (ETCA) மீண்டும் தொடங்குவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்கள் ஆன்லைன் முறையில் செப்டம்பர் 19 ஆம் திகதி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முந்தைய 11 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை குறிக்கிறது.

இலங்கை

மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்

  • September 23, 2023
  • 0 Comments

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த […]

இலங்கை

மட்டக்களப்பு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை : விசேட கூட்டங்களுக்கு ஏற்பாடு!

  • September 23, 2023
  • 0 Comments

மயிலத்தமடு,  மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் விசேட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் தெரிவித்தார். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தின் விவசாய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (23.09) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூட்டத்தினை நடாத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கான கூட்டங்கள் நடைபெறுகின்றபோதிலும் விவசாய செய்கை […]

இலங்கை

இலங்கையில் இணைய மோசடிகள் அதிகரிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 150 முறைப்பாடுகள் இணைய மோசடிகள் குறித்து கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல தெரிவித்துள்ளார். தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் : சி.வி.கே. சிவஞானம்

  • September 23, 2023
  • 0 Comments

இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சரியான பொறிமுறை ஏற்படுத்தப்படாத நிலையில் இதனை காரணமாக வைத்து கடன் வழங்குவது தொடர்பில் ஐ.எம்.எப் பரிசீலனை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது […]

error: Content is protected !!