ஆப்பிரிக்கா செய்தி

நைஜீரிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகளால் கடத்தப்பட்ட 24 பேர் பெண் மாணவிகள்

  • September 23, 2023
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் 24 மாணவிகள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். கொள்ளைக் கும்பலைச் சேர்ந்ததுப்பாக்கி ஏந்தியவர்கள், மாநிலத் தலைநகர் குசாவுக்கு வெளியே ஃபெடரல் பல்கலைக் கழகத்தின் விளிம்பில் உள்ள சபோன் கிடா கிராமத்தில் ஒரு முன்கூட்டிய தாக்குதலில் மூன்று பெண் விடுதிகளை உடைத்து உள்ளே இருந்தவர்களை அழைத்துச் சென்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். நாட்டின் பாதுகாப்பு சவால்களை […]

இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

காலியில் இன்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி – டிக்ஷன் வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உந்துருளியில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விளையாட்டு

T20 உலக கோப்பை போட்டிகளுக்கான இடங்களை அறிவித்த ICC

  • September 23, 2023
  • 0 Comments

டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் […]

உலகம்

பல்கலைக்கழக படிப்பில் சேர 4000 கிலோமீட்டர் சைக்கிளில் சென்ற வாலிபர்

  • September 23, 2023
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு விமானத்தில் செல்ல பணம் இல்லாமல் தவித்தார். எனினும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக கடந்த மே மாதமே சைக்கிளில் எகிப்துக்கு பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கிருந்து மாலி, புர்கினா பாசோ, நைஜர், டோகோ, பெனின் உள்ளிட்ட நாடுகளை கடந்த […]

இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவதற்கு மக்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர்: ராமலிங்கம் சந்திரசேகரன்

  • September 23, 2023
  • 0 Comments

மக்கள் ஆணையில்லாத ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன்.தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்களை மேலும் பொருளாதார ரீதியிலும் விலை ஏற்ற ம் போன்ற செயற்பாடுகள் மூலம் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஒரு ஜனாதிபதியாக காணப்படுகின்றார். மக்கள் வெகு சீக்கிரம் இவரை வீட்டுக்கு அனுப்பு நடவடிக்கையில் ஈடுபட […]

இலங்கை

திருகோணமலையில் கற்பிணித் தாயை தள்ளிவிட்டு தங்க நகை கொள்ளை சம்பவம்!

  • September 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் கற்பிணித் தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை அபகரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கற்பிணி தாயொருவர் (22) மதியநேர உணவு இடைவேளையில் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருகை தந்தபோது அன்புவழிபுரம் பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் அவரது கழுத்தில் இருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர். இதன்போது அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த […]

இலங்கை

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து: இருவர் படுகாயம்

  • September 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி தானியகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கடற்படை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தானியகம பிரதேசத்தில் கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சிகை அலங்கார நிலையம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன் காயம் அடைந்தவர்களில் ஒருவர் கடற்படை தளத்திற்குச் சொந்தமான வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு உள்ளான கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் திருகோணமலை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]

உலகம்

பெருவில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 08 மம்மிகள் கண்டுப்பிடிப்பு!

  • September 23, 2023
  • 0 Comments

பெருவின் லிமாவில் உள்ள எரிவாயு தொழிலாளர்கள், இந்த வாரம் எட்டு மம்மிகள் மற்றும் பல இன்காவிற்கு முந்தைய கலைப்பொருட்களை நகரத்தின் பண்டைய தெருக்களில் கண்டுப்பிடித்துள்ளனர். பெருவின் தலைநகரில் 10 மில்லியன் மக்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனமான கலிடாவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜீசஸ் பஹமொண்டே இது குறித்து கருத்து வெளியிடுகையில்,  “லிமாவின் இழந்த வரலாற்றின் இலைகளை நாங்கள் மீட்டெடுக்கிறோம், அவை தடங்கள் மற்றும் தெருக்களுக்கு அடியில் மறைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார். இதுவரை  1,900 க்கும் மேற்பட்ட தொல்பொருள் […]

இலங்கை

மன்னாரில் தியாக தீபத்துக்கு நினைவேந்தல் நிகழ்வு (photos)

  • September 23, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 23.09.2023 (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப் படவுள்ளது. மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அடையாள உண்ணாவிரத போராட்டமாக அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,கட்சியின் முக்கியஸ்தர்கள், மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு சுடர் ஏற்றி,மலர் தூவி […]

இலங்கை

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது : மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன

  • September 23, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இன்று தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் முதல் நோக்காகக்கொண்டு செயற்பட்டுவருவதாக அவர் மேலும் கூறினார். தொப்பிகல பகுதியை அண்மித்த ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். தொப்பிகல இராணுவ கட்டளையதிகாரி சந்தன […]

error: Content is protected !!